'உற்சாகமாக வாக்கு சேகரித்த பாஜக முன்னாள் எம்பி'.. சற்றும் எதிர்பாராமல், 'ஒரு செகண்ட்' தொண்டர்களை உறையவைத்த 'பேச்சு!'.. வைரலான சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்திய பிரதேசத்தில் தேர்தல் பரப்புரையின் போது ஜோதிராதித்ய சிந்தியா (Jyotiraditya Scindia), காங்கிரஸ் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது.
பாஜகவை சேர்ந்த முன்னாள் எம்.பி ஜோதிராதித்ய சிந்தியா, சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது, வரும் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் “கை சின்னத்தில் வாக்களியுங்கள்.. காங்” என்று சொல்ல வந்து உடனே ஒரு கணம் சுதாரித்து, பாஜகவிற்கு வாக்கு சேகரித்தார்.
முன்னதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் கமல்நாத் தன்னை நாய் என்று கூறியதற்கு பதில் அளிக்கும் வகையில், “ஆம் நான் நாய் தான். ஏனென்றால் நான் மக்களின் சேவகன். நாய் அதன் உரிமையாளர்களை பாதுகாப்பது போல், மக்களின் காவலனான நான் மக்களுக்கு எதிராக செயல்படுவோரை நாயாக மாறி தாக்குவேன்.’’ எனக் கூறியிருந்த நிலையில் தற்போது இவ்வாறு மாற்றி வாக்கு சேகரித்துள்ளார்.
கடந்த மார்ச் 2020ல் இவர் காங்கிரஸை விட்டு விலகி பாஜகவில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்