"ஆந்திர மாநிலத்தின் தலைநகர் இனி இதுதான்".. முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆந்திராவின் புதிய தலைநகராக விரைவில் விசாகப்பட்டினம் மாற்றப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். இது இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற சர்வதேச தூதர்கள் வட்டமேசைக் கூட்டத்தில் உரையாற்றிய ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஆந்திர மாநிலம் தொடர்ச்சியாக மூன்று முறை, எளிதாக வணிகம் செய்வதில் நாட்டிலேயே முதலிடத்தைப் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து வரும் மார்ச் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் விசாகப்பட்டினத்தில் நடைபெறும் உலகளாவிய முதலீட்டாளர் சந்திப்பில் (Global Investor’s summit) கலந்துகொள்ள விருந்தினர்களுக்கு அழைப்பு விடுத்தார். அப்போது விசாகப்பட்டினம் விரைவிலேயே ஆந்திர மாநிலத்தின் தலைநகராக மாறும் என அவர் அறிவித்தார்.
Images are subject to © copyright to their respective owners.
தொழில் வளர்ச்சி பற்றி பேசிய அவர் 2021-22 நிதியாண்டில் 11.43% ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்துடன் நாட்டிலேயே வேகமாக வளரும் மாநிலமாக ஆந்திரப் பிரதேசம் உருவெடுத்துள்ளதாகவும் உலகெங்கிலும் உள்ள வணிகங்களுக்கு ஆந்திர பிரதேசம் சிறந்த தேர்வாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், தொழில் துவங்குவதற்கான அனைத்து ஒப்புதல்களும் 21 நாட்களுக்குள் கிடைக்கும் என அவர் அறிவித்தார்.
தொடர்ந்து தலைநகர் மாற்றம் குறித்து பேசிய ஜெகன் மோகன் ரெட்டி,"விரைவில் எங்களுடைய தலைநகராக மாறவுள்ள விசாகப்பட்டினத்துக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இன்னும் சில மாதங்களில் நானும் விசாகப்பட்டினத்தில் குடியேற இருக்கிறேன். விசாகப்பட்டினத்தில் வரும் மார்ச் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் உலகளாவிய முதலீட்டாளர் சந்திப்பு நடைபெற இருக்கிறது. அதில் கலந்துகொள்ள உங்கள் ஒவ்வொருவரையும் அழைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்" என்றார்.
Images are subject to © copyright to their respective owners.
ஏற்கனவே, ஆந்திர மாநிலத்தின் தலைநகரை அமராவதியில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு மாற்ற முயற்சிகள் எடுக்கப்படும் என ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்திருந்த நிலையில், தற்போது அவர் இதுகுறித்து தற்போது பேசியிருப்பது இந்திய அளவில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
#WATCH | "Here I am to invite you to Visakhapatnam which will be our capital in the days to come. I will also be shifting to Visakhapatnam in the months to come": Andhra Pradesh CM YS Jagan Mohan Reddy at International Diplomatic Alliance meet in Delhi pic.twitter.com/wANqgXC1yP
— ANI (@ANI) January 31, 2023
Also Read | இறந்த பிறகு நரகத்துக்கு போனதாக கூறிய அமெரிக்கர்.! இதுபற்றி அவர் சொன்னது என்ன ?
மற்ற செய்திகள்