"உங்க எல்லாரோட அன்புக்கும் நன்றி..." 'குட் நியூஸ்' பகிர்ந்த 'விராட் கோலி'... 'வாழ்த்தித்' தள்ளும் 'ரசிகர்கள்'!!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டிகள் விளையாடி வருகிறது.

"உங்க எல்லாரோட அன்புக்கும் நன்றி..." 'குட் நியூஸ்' பகிர்ந்த 'விராட் கோலி'... 'வாழ்த்தித்' தள்ளும் 'ரசிகர்கள்'!!!

முன்னதாக, இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி, தன்னுடைய குழந்தை பிறப்பையொட்டி தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் இருக்க வேண்டும் என்பதால் முதல் டெஸ்ட் போட்டியுடன் அவர் இந்தியா திரும்பியிருந்தார்.

இந்நிலையில், விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தன்னுடைய மனைவியும், குழந்தையும் நலமுடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ள விராட் கோலி, தங்களுடைய வாழ்க்கையில் புதிய பயணம் தொடங்கவிருப்பதையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். 

 

இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மாவிற்கு ரசிகர்கள் தற்போது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்