Wedding function-ல் கலந்துகொண்ட கோலி… சலித்துக் கொண்ட அனுஷ்கா… ஓ இதுதான் காரணமா?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கடந்த சில ஆண்டுகளாக மிக மோசமான பார்மில் இருக்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கோலி.

Wedding function-ல் கலந்துகொண்ட கோலி… சலித்துக் கொண்ட அனுஷ்கா… ஓ இதுதான் காரணமா?

Also Read | 'வியாபாரம் இல்லாமல் தவித்த பாட்டிம்மா'.. திக்குமுக்காட வைத்த கலெக்டர்! மனச உருக வச்ச வீடியோ!

கோலி அனுஷ்கா காதலும் திருமணமும்…

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பாலிவுட் பிரபல நடிகையுமான அனுஷ்கா ஷர்மா சில ஆண்டுகளுக்கு முன்னர் நட்சத்திர காதல் ஜோடிகளாக வலம் வந்தனர். அதையடுத்து அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு வாமிகா என்ற மகள் இருக்கிறார். குழந்தையின் புகைப்படத்தை அதிகமும் சமூகவலைதளங்களில் பகிராமல் இருவருமாக வளர்த்து வருகின்றனர்.

கோலியின் கடந்த இரண்டு ஆண்டுகள்..

2014 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞர்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பைப் பெற்ற கோலி 7 ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியை விராட் கோலி வழிநடத்தினார். இருப்பினும் அந்த அணி ஐபிஎல் கோப்பையை இதுவரையில் வாங்காததால் அதற்கு பொறுப்பேற்று அணி கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதே போல அடுத்தடுத்து டி 20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளுக்கான கேப்டன்ஷிப்பில் இருந்து விலகினார். இது சர்வதேசக் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது.

Virat kohli and anushka Sharma wedding event in bubble

இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று பரவ ஆரம்பித்த பிறகு கோலியின் கிரிக்கெட்  ஆட்டங்கள் பின்னடைவை சந்தித்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் 100 போட்டிகள் கிட்டத்தட்ட ஆடியும் கோலி சதம் அடிக்காதது,  தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரிலும் அவரது ஃபார்மில் இல்லாத ஆட்டம் என பல விஷயங்களும் பேசுபொருளானது. இதனிடையே, கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர் போட்டிகளால் இந்திய அணியினர் பயோ பபுளில் தொடர்ந்து இருக்க வைக்கப்பட்டனர்.

Virat kohli and anushka Sharma wedding event in bubble

அனுஷ்கா பகிர்ந்த புகைப்படம்…

இந்நிலையில் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மா தற்போது கோலியுடன் ஒரு திருமண நிகழ்ச்சியில் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தோடு “பயோ பபுளுக்குள் ஒரு திருமண நிகழ்ச்சி. இப்போது யோசித்து பார்த்தால் நாங்கள் எல்லா நிகழ்ச்சிகளையும் பயோ பபுளுக்குள்தான் கொண்டாடி இருக்கிறோம். Bubble life” எனக் கூறியுள்ளார். 

Virat kohli and anushka Sharma wedding event in bubble

திருமண நிகழ்ச்சி என்று மட்டுமே அனுஷ்கா கூறியுள்ள நிலையில் சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட RCB வீரர் க்ளன் மேக்ஸ்வெல்லின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியாக இருக்கலாம் என ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

VIRAT KOHLI, ANUSHKA SHARMA, WEDDING EVENTS, அனுஷ்கா ஷர்மா, விராட் கோலி

மற்ற செய்திகள்