இந்தியாவில் கொரோனா 2-வது அலையால் ‘இங்கதான்’ பாதிப்பு அதிகம்.. என்ஜிஓ ஆய்வில் முக்கிய தகவல்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி குறித்து அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் என்ற தன்னார்வ அமைப்பு (NGO) அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா 2-வது அலையால் ‘இங்கதான்’ பாதிப்பு அதிகம்.. என்ஜிஓ ஆய்வில் முக்கிய தகவல்..!

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 2 கோடியே  87 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 3 லட்சத்துக்கு 44 ஆயிரம் நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால் நோய் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Villages affected more in Covid-19 second wave says NGO

இந்த நிலையில் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் என்ற தன்னார்வ அமைப்பு நடத்திய ஆய்வில், இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையால் கிராமங்கள்தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு வெளியிட்ட மே மாதத்துக்கான தரவுகளில், கொரோனா தொற்றில் 53 சதவீதமும், உயிரிழப்பில் 52 சதவீதமும் கிராமங்களில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Villages affected more in Covid-19 second wave says NGO

தற்போதைய நிலவரப்படி கிராமங்களில் கூடுதலாக 76 சதவிகித அளவுக்கு மருத்துவர்கள் மற்றும் 35 சதவிகித அளவுக்கு ஆய்வக தொழில்நுட்ப ஊழியர்களின் தேவை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த மே மாதம் புதிய தொற்றுகளும், உயிரிழப்புகளும் அதிகம் பதிவானது கிராமங்களில்தான் என்ற அதிர்ச்சி தகவலையும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

Villages affected more in Covid-19 second wave says NGO

இதனிடையே கிராமங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மகாராஷ்டிரா அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி கொரோனா இல்லாத கிராமத்திற்கு 50 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்