‘நிச்சயம் ஒருநாள் வருவார்னு நம்புறோம்’!.. சூப்பர்ஸ்டாரின் வருகைக்காக காத்திருக்கும் கிராமம்.. பின்னணியில் சுவாரஸ்ய காரணம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாநடிகர் ரஜிகாந்தின் வருகைக்காக ஒரு கிராமம் காத்திருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாவடி கதேபதார் என்ற கிராமம்தான், நடிகர் ரஜினிகாந்தின் சொந்த ஊர் என்று சொல்லப்படுகிறது. அங்கு ரஜினியின் குடும்ப பெயரான ‘கெய்க்வாட்’ என்ற பெயர் கொண்ட பலர் வசித்து வருகின்றனர். அந்த கிராமத்தினர், நடிகர் ரஜினிகாந்தின் வருகையை எதிர்பார்த்து ஆவலுடன் காத்துள்ளனர்.
இதுகுறித்து கூறிய அந்த கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சதானந்த் ஜகதாப், ‘ரஜினியின் தாத்தா இந்த ஊரில் இருந்துதான் கர்நாடகாவுக்கு சென்றார். ரஜினியின் குடும்பத்துக்கு இங்கு நிலம் உள்ளது. அவர் இந்த மண்ணின் மைந்தர். சில ஆண்டுகளுக்கு முன்பு, புனே அருகே லோனோவாலாவில் அவர் ஒரு படப்பிடிப்புக்காக வந்திருந்தார். அப்போது அவரை நாங்கள் சந்தித்தோம். நாங்கள் அவரிடம் இந்தியில் பேசியபோது, அவர் மராத்தியில் பேசுமாறு கூறினார். அப்போது, தனது சொந்த கிராமமான மாவடி கதேபதாருக்கு ஒருநாள் வருவதாக உறுதியளித்தார். சொன்னதுபோல் அவர் வருவார் என நம்புகிறோம். அவருக்கு விருது கிடைத்ததை அறிந்து ஒட்டுமொத்த கிராமமும் பெருமைப்பட்டது’ எனக் கூறியுள்ளார்.
இந்திய திரையுலகின் மிக உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருது நடிகர் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தனது நடிப்பு திறைமையை கண்டுபிடித்து ஊக்குவித்த பஸ் டிரைவரான நண்பன் ராஜ் பகதூருக்கும், வறுமையில் வாடும்போது தன்னை நடிகனாக்க பல தியாகங்களை செய்த அண்ணன் சத்ய நாராயணா ராவ் கெய்க்வாட்டுக்கும், குருநாதர் கே.பாலச்சந்தருக்கும் நன்றி தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்