தவளை கல்யாணம் கூட கேள்விப்பட்டுருக்கோம்.. ஆனா இது புதுசா இருக்குப்பா.. விநோத சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மத்திய பிரதேசத்தில் ஒரு கிராமத்தில் விநோத திருமணம் ஒன்று நடைபெற்றிருக்கிறது. இது தொடர்பான தகவல்கள் தான் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திவருகிறது.

தவளை கல்யாணம் கூட கேள்விப்பட்டுருக்கோம்.. ஆனா இது புதுசா இருக்குப்பா.. விநோத சம்பவம்..!

                             Images are subject to © copyright to their respective owners.

Also Read | KGF ராக்கி பாய் பாணியில் கடலுக்குள் கொட்டப்பட்ட 12 கிலோ தங்கம்... சினிமாவை மிஞ்சும் சம்பவம்..!

பொதுவாக வளர்ப்பு பிராணிகள் மீது பலரும் மிகுந்த அன்பை கொண்டிருப்பதை பார்த்திருப்போம். வளர்ப்பு பிராணிகளை தங்களது வீட்டில் ஒருவர் போலவே மக்கள் வளர்த்து வருவதை சமூக வலைதளங்கள் வாயிலாக நாம் அவ்வப்போது அறிந்து வருகிறோம். இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் விநோத சம்பவம் ஒன்று நடைபெற்றிருக்கிறது. தங்கள் ஆசையாக வளர்த்து வந்த பறவைகளுக்கு திருமணம் செய்து வைத்திருக்கின்றனர் அதன் உரிமையாளர்கள்.

மத்திய பிரதேச மாநிலத்தின் கரேலி அருகே உள்ளது பிபாரியா கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த ராம் ஸ்வரூப் பரிகார் என்பவர் தனது வீட்டில் மைனா ஒன்றினை வளர்த்து வந்திருக்கிறார். தன்னுடைய மகள் போல கருதி அந்த மைனாவை பாசத்துடன் அவர் வளர்த்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் அந்த மைனாவிற்கு திருமணம் செய்து வைக்க ராம் ஸ்வரூப் பரிகார் முடிவு எடுத்து இருக்கிறார். அதே வேளையில் பதால் லால் விஸ்வகர்மா என்பவரும் தனது வீட்டில் கிளி ஒன்றினை பாசத்துடன் வளர்த்து வந்திருக்கிறார்.

Images are subject to © copyright to their respective owners.

அவருக்கும் தனது கிளிக்கு ஒரு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து ராம் ஸ்வரூப் பரிகார் மற்றும் பதால் லால் ஆகியோர் இணைந்து பேசி கிளிக்கும் மைனாவிற்கும் திருமணம் நடத்த ஏற்பாடு செய்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து ஜாதக முறைப்படி இவர்களுக்கு திருமணத்தை நடத்த திட்டமிட்டதாகவும் அதன் பின்னர் உள்ளூர் மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் இந்த பறவைகளின் உரிமையாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இதனை தொடர்ந்து சமீபத்தில் இவர்களது திருமணமும் உள்ளூர் மரபுப்படி நடைபெற்று இருக்கிறது. அப்போது மணமக்களை அலங்கரிக்கப்பட்ட சிறிய ரிமோட் மூலம் இயங்கக்கூடிய வாகனத்தில் ஊர்வலமாக அழைத்து வந்திருக்கின்றனர். இதனை இந்த ஊர் மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்திருக்கின்றனர்.  இதனைத் தொடர்ந்து இசைக் கச்சேரியும் நடத்தப்பட்டிருக்கிறது.

Images are subject to © copyright to their respective owners.

கிளிக்கும் மைனாவிற்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டிருப்பது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவியும் வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.

Also Read | "இனி அது என் குழந்தை".. சிரியா பூகம்பத்தின் போது பிறந்த 'மிராக்கிள்'.. உயிரை கொடுத்து காப்பாத்திய டாக்டரின் நெகிழ வைக்கும் செயல்..!

MADHYA PRADESH, VILLAGERS, ARRANGE, MARRIAGE, PARROT, MYNA

மற்ற செய்திகள்