“சொந்தக் கட்சியினரே... காரை வழிமறித்து தாக்க முயற்சியா?”.. “ரோஜாவுக்கு நேர்ந்தது என்ன?”.. பரபரப்பு வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிரைப்பட நடிகையாக இருந்து அரசியலுக்கு வந்தவர் ரோஜா. தற்போது நகரி சட்டமன்ற உறுப்பினராகவும், ஆந்திர மாநில தொழில்துறை உட்கட்டமைப்பு கழக தலைவராகவும் பணியாற்றி வரும் இவரை இவரது சொந்த கட்சியினரே தாக்க முயற்சித்ததாகக் கூறப்படும் சம்பவம் வீடியோவாக இணையத்தில் வலம் வருகிறது.
சித்தூர் மாவட்டம் கே.வி.புரத்தில் புதிதாக கட்டப்பட்டு இருக்கும் கிராமத்தின் தலைமை செயலகத்தை திறந்து வைப்பதற்கான பூமி பூஜைக்காக, ரோஜா அங்கு சென்றார். அப்போது ரோஜாவின் காரை வழி மறித்து பலரும் தாக்க முயற்சிக்கின்றனர். அவர்களை போலீஸார் தடுக்கின்றனர்.
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி பிரமுகரான மண்டல ஒன்றியக் குழு உறுப்பினர் அம்முலுவுக்கும் ரோஜாவுக்கும் இடையே பனிப்போர் நிலவுவதாகவும், அதனால் அவரது ஆதரவாளர்கள் ரோஜாவை தாக்க முயன்றதாகவும் ஒரு சிலர் தெரிவித்துள்ளனர். ஆனால் தெலுங்கு தேசம் கட்சியினர்தான்
நகரி எம்.எல்.ஏ ரோஜா மீது சொந்த கட்சியினரே தாக்க முயற்சி pic.twitter.com/iDR26j0sln
— Lingam S Arunachalam (@as_lingam) January 6, 2020
தன்னை தாக்க முயன்றதாகவும், கட்சிக்குள் பிளவினை உண்டாக்குவதற்காக, தன் சொந்தக் கட்சியினர் தன்னை தாக்க முயன்றது போன்ற தோற்றத்தை, தெலுங்கு தேசம் கட்சியினர் ஏற்படுத்துவதாகவும் ரோஜா தெரிவித்துள்ளார்.