சுரங்கத்துல வேலை பார்க்குறப்போ பெண்ணுக்கு அடிச்ச ஜாக்பாட்...ஒரே நாள்ல லட்சாதிபதியான சுவாரஸ்யம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்திய பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவருக்கு வைரக்கல் கிடைத்திருக்கிறது. ஏலத்தில் சுமார் 10 லட்சம் வரையில் அந்த கல் விற்பனையாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பன்னா மாவட்டம்
மத்திய பிரதேசத்தின் உள்ள பன்னா மாவட்டத்தில் பல வைர சுரங்கங்கள் இருக்கின்றன. இங்கு உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இந்த சுரங்கங்களில் வைரம் தேடுவது வழக்கம். அப்படி, சாதாரண மக்கள் இந்த சுரங்கங்களில் வைரத்தினை கண்டுபிடித்தால், அதனை அதிகாரிகளிடத்தில் .ஒப்படைக்க வேண்டும். அரசு அந்த வைரத்தினை ஏலத்தில் விட்டு, அந்த தொகையை வைர கல்லை கண்டுபிடித்தவருக்கு வழங்கும். அதே நேரத்தில் ஏல தொகையில் இருந்து குறிப்பிட்ட சதவீத பணத்தை வரியாகவும், ராயல்டியாகவும் அரசுக்கு செலுத்த வேண்டும்.
அதிர்ஷ்டம்
மத்திய பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் வசித்துவருபவர் சமேலி பாய். இல்லத்தரசியான இவர் தனது கணவர் அரவிந்த் சிங்குடன் இணைந்து சுரங்க வேலையில் ஈடுபட்டுவருகிறார். கிருஷ்ணா கல்யாண்பூர் பகுதியில் வைர சுரங்கத்தின் சிறிய பகுதியை லீஸ்-க்கு எடுத்திருக்கிறது அரவிந்த் சிங் - சமேலி பாய் தம்பதி. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக தங்களுடைய இடத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார் சமேலி. அப்போது தரையில் வித்தியாசமாக ஏதோ ஒரு பொருள் இருப்பதை அவர் பார்த்துள்ளார்.
கொஞ்ச நேரத்தில் அது வைரக்கல் தான் என்பது சமேலிக்கு தெரியவந்திருக்கிறது. இதனால் குதூகலமடைந்த அவர், அந்த கல்லை வைர சுரங்க அதிகாரியிடம் ஓப்படைத்திருக்கிறார்.
ஏலம்
இதுகுறித்துப் பேசிய வைர சுரங்க அதிகாரியான அனுபம் சிங்,"இத்வாகாலா கிராமத்தைச் சேர்ந்த சமேலி பாய் என்பவருக்கு 2.08 கேரட் வைரக்கல் கிடைத்திருக்கிறது. ஏலத்தில் இந்த கல் 10 லட்சம் வரையில் விற்பனையாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசுக்கு செலுத்தவேண்டிய வரி பிடித்தம் செய்யப்பட்டதுபோக, மிதித் தொகை சமேலிக்கு வழங்கப்படும்" என்றார்.
இந்த பணத்தைக் கொண்டு பன்னா நகரத்தில் சொந்த வீடு வாங்கும் முயற்சியில் ஈடுபட இருப்பதாக மகிழ்ச்சியுடன் கூறுகிறார் சமேலி. பன்னா மாவட்டத்தில் 12 லட்சம் கேரட் வைரம் வெட்டியிடுக்கப்படாமல் உள்ளது. இதன் காரணமாக பல்வேறு மக்களுக்கும் இந்த சுரங்களில் பணிபுரிய அதிக ஆர்வம் இருந்துவருகிறது.
இந்நிலையில் சமேலி பாய் என்னும் பெண்ணுக்கு அங்குள்ள சுரங்கத்தில் இருந்து வைரக்கல் கிடைத்த சம்பவம் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்