‘மௌனம்’ கலைத்த ‘விஜய் சேதுபதி’! முத்தையா முரளிதரனின் ‘பரபரப்பு’ அறிக்கை வெளியான சில நிமிடங்களிலேயே.. விஜய் சேதுபதி போட்ட வைரல் ‘ட்வீட்!’

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்கை வரலாற்று திரைப்படமான 800 திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் விவகாரத்தில் தமிழர்கள் அளவில் உருவான எதிர்ப்புகளை அடுத்து முத்தையா முரளிதரன் பரபரப்பு அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.

‘மௌனம்’ கலைத்த ‘விஜய் சேதுபதி’! முத்தையா முரளிதரனின் ‘பரபரப்பு’ அறிக்கை வெளியான சில நிமிடங்களிலேயே.. விஜய் சேதுபதி போட்ட வைரல் ‘ட்வீட்!’

அந்த அறிக்கையில், “என் மீதான தவறான புரிதலால் எனது சுயசரிதை படமான 800 திரைப்படத்திலிருந்து விலக வேண்டுமென நடிகர் விஜய்சேதுபதி அவர்களுக்கு சிலர் தரப்பிலிருந்து கடுமையான அழுத்தம் தருவதை நான் அறிகிறேன். தமிழ்நாட்டின் ஒரு தலை சிறந்த கலைஞன் என்னால் பாதிப்படைவதை நான் விரும்பவில்லை. விஜய் சேதுபதி அவர்களின் கலைப் பயணத்தில் வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு இந்த படத்தில் இருந்து விலகுமாறு அவரை கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டு முத்தையா முரளிதரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் இதுவரை இந்த விவகாரத்தில் மௌனமாக இருந்து வந்த விஜய் சேதுபதி, ட்விட்டர் பக்கத்தில் முத்தையா முரளிதரன் வெளியிட்ட இந்த அறிக்கையை,  நடிகர் விஜய் சேதுபதி “நன்றி.. வணக்கம் 🙏🏻!” என்கிற கேப்ஷனுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த பகிர்ந்துள்ளார். இதன் மூலம் முத்தையா முரளிதரனின் அறிக்கையை விஜய் சேதுபதி வழிமொழிகிறார் என்பதையும், முத்தையா முரளிதரன் குறிப்பிட்டிருப்பது போல, தமிழகத்தில் உருவான சர்ச்சை காரணமாக முத்தையா முரளிதரனின் 800 எனும் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் இருந்து விலகுமாறு முத்தையா முரளிதரன் முன்வைத்த கோரிக்கையை விஜய் சேதுபதி ஏற்று அப்படத்தில் இருந்து விலகுகிறார் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

VijaySethupathi decision over 800 BipPic movie after Muthiah statement

எனினும் இதுபற்றி பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “நன்றி வணக்கம் என்றால் எல்லாமே முடிந்துவிட்டது, இனி அதைப்பற்றி பேச ஒன்றுமில்லை” என்று விஜய் சேதுபதி பதில் அளித்தார். 

மற்ற செய்திகள்