SS ராஜமௌலி - MM கீரவாணியின் Fire கெமிஸ்ட்ரியின் காரணம் இதுதானா?.. ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் Exclusive.!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇயக்குநர் SS ராஜமௌலியின் தந்தையும் எழுத்தாளருமான விஜயேந்திர பிரசாத் நம்முடைய சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்திருக்கிறார்.
ராஜமௌலி
மூன்று தேசிய திரைப்பட விருதுகளை பெற்ற ராஜமௌலி ஸ்டூடண்ட் நம்பர் ஒன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனையடுத்து Sye, சத்ரபதி , மகதீரா உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய ராஜமௌலி பாகுபலி முதல் இரண்டு படங்களையும் இயக்கியிருந்தார். சமீபத்தில் இவருடைய இயக்கத்தில் ரிலீசான படம் "RRR". ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடித்தனர்.
Images are subject to © copyright to their respective owners.
ராஜமௌலியின் பாகுபலி (2015), பாகுபலி- 2 (2017), மற்றும் ஆர்ஆர்ஆர் (2022) ஆகியவை இன்று வரை இந்தியாவில் அதிக வசூல் செய்த படங்களில் முதல் ஐந்து இடங்களில் உள்ளன. இந்த மூன்று படங்களுமே அவை வெளியான நேரத்தில் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இந்தியப் படங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Images are subject to © copyright to their respective owners.
விருது
இந்த சூழ்நிலையில் RRR படத்தின் இசையமைப்பாளர் நாட்டு நாட்டு பாடலுக்காக கோல்டன் குளோப் மற்றும் ஆஸ்கர் ஆகிய இரு விருதுகளையும் வென்று இந்திய திரை ஆர்வலர்களை பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார். ராஜமௌலியின் ஃபேவரைட் இசையமைப்பாளராக கருதப்படும் கீரவாணி குறித்தும் இருவருடைய உள்ள கெமிஸ்ட்ரி பற்றியும் மனம் திறந்து பேசியிருக்கிறார் ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத்.
இதுபற்றி அவர் பேசுகையில்,"அவர்கள் இருவரும் சிறுவயதில் இருந்தே ஒன்றாக வளர்ந்தவர்கள். சிறுவயது முதலே ஒன்றாக வளர்ந்தவர்கள். கீரவாணியை ராஜமௌலி தன்னுடைய மூத்த சகோதரர் போலவே கருதுபவர். ஒருவருக்கொருவர் ஆலோசனையும் வழங்கிக்கொள்வார்கள்" என்றார்.
மற்ற செய்திகள்