மேலே இருந்து 'பறந்து' வந்த கார்.. நடந்து சென்ற பெண் 'பரிதாப' பலி.. 'பதைக்க' வைக்கும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாபாலத்தின் மீது இருந்து பறந்து வந்த காரால் நடந்து சென்ற பெண் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹைதராபாத்தின் ஹச்சிபவ்ளி என்ற இடத்தில் பையோடைவர் சிட்டி பாலம் ஒன்று சமீபத்தில் திறக்கப்பட்டது. 69.47 கோடி செலவில் உருவான இந்த பாலம் முக்கிய வழிகளை இணைக்கிறது. இந்தநிலையில் இன்று மதியம் இந்த பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே பறந்து வந்தது.
#WATCH A car after losing control falls from flyover located at Biodiversity Junction, Raidurgam in Hyderabad; one pedestrian has lost her life in the incident, car driver and 2 others receive injuries; Case registered pic.twitter.com/Tjl8yPaC8g
— ANI (@ANI) November 23, 2019
சரியாக அந்த சமயத்தில் கீழே நடந்து சென்ற பெண் ஒருவர் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே அந்த பெண் பலியானார். மேலும் அங்கிருந்த மரம் ஒன்றையும் அந்த கார் வேருடன் பெயர்த்து தூக்கியது. இதில் டிரைவர் உட்பட 6 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
அவர்கள் அனைவரும் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விபத்தை தொடர்ந்து அந்த பாலம் 3 நாட்களுக்கு மூடப்பட்டு உள்ளது. விபத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு ரூபாய் 5 லட்சத்தினை ஹைதராபாத் மேயர் நிவாரணமாக அறிவித்துள்ளார்.