Video: 'ஒண்ணு' தான் ஷேர் பண்ணி சாப்பிடுங்க... 'பசியுடன்' இருந்த தொழிலாளர்களுக்கு பிஸ்கட் பாக்கெட்டை... 'தூக்கி' வீசிய அதிகாரி!
முகப்பு > செய்திகள் > இந்தியாபிஸ்கட் பாக்கெட்டை ரயில்வே அதிகாரி தூக்கிப்போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஊரடங்கு உத்தரவு காரணமாக நாடு முழுவதும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஏராளமான இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். மாநில அரசுகள் சிறப்பு ட்ரெயின் வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தாலும், நடந்து செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கை சற்றும் குறையவில்லை.
Blood boiling video. This is how #railway staff provide biscuits to underprivileged workers travelling in #shramikexpress. Man in red T-shirt is Tundla CIT admin D K Dixit. One can hear him using slur against poor hungry workers. Video shot on May 25. @PiyushGoyal @RailMinIndia pic.twitter.com/ghLGPPI9g8
— Arvind Chauhan (@arvindcTOI) May 29, 2020
இந்த நிலையில் தொழிலாளர்கள் செல்லும் சிறப்பு ட்ரெயின் ஒன்றில் ரெயில்வே அதிகாரி ஒருவர் பிஸ்கட் பாக்கெட்டுகளை தூக்கிப்போடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உத்தர பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் ரெயில் நிலையத்தில் தலைமை பயணச்சீட்டு பரிசோதகராகப் பணியாற்றி வருபவர் டி.கே.தீக்ஷித். இவர் கடந்த மே 25-ம் தேதி தீக்ஷித் ட்ரெயினில் பசியுடன் அமர்ந்திருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகளை ரயிலின் ஜன்னல் வழியாகவும், ட்ரெயினில் ஏறி செல்லும் பாதைகளின் வழியாகவும் தூக்கி வீசுகிறார்.
Strict disciplinary action has already been taken against responsible. It is extremely unfair to portray all Railway staff with this incident.
— railway northcentral (@CPRONCR) May 29, 2020
மேலும் இந்தியில் தொழிலாளர்களை அவர்கள் கிண்டலடிப்பதும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த வீடியோ நாடு முழுவதும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக ரயில்வே அமைச்சகமானது தனது ட்விட்டர் பக்கத்தில், ''சி.ஐ.டி டி.கே.தீக்ஷித், பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது,''என தெரிவித்து இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக மேலும் 8 ரெயில்வே ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கின்றனர்.
மற்ற செய்திகள்




