ஒரு நிமிசத்தில இப்படி செய்ய முடியுமா? .. ராணுவ வீரரின் அசாத்திய சாதனை

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனோ வைரஸ் தொற்று காரணமாக யாரும் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வதில்லை. ஆனால் வீட்டில் லாக்டவுன் காரணமாக நிறைய பேருக்கு உடல் எடை அதிகரித்துள்ளது. கொரோனா காலத்திலும் இளைஞர்கள், முதியவர்கள் உடற்பயிற்சி செய்து உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஒரு நிமிசத்தில இப்படி செய்ய முடியுமா? .. ராணுவ வீரரின் அசாத்திய சாதனை

அந்த வகையில் அண்மையில் வெளிநாட்டு இளைஞர் ஒருவர் ஊரடங்கு நேரத்தை சரியாக பயன்படுத்தி, ஒரு நாளுக்கு 100 புல்- அப்கள், 100 புஷ் - அப்கள் எடுத்து ஆச்சர்யபட வைத்தார். அதோடு 100 குந்துகைகள் செய்தும் அசத்தி பிறருக்கும் சவால் விடுத்தார். இதற்கென்று பிரேத்யக செயலியை உருவாக்கி அவர்களுக்கும் உடற்பயிற்சியின் அவசியத்தை எடுத்துரைத்து வருகிறார். இவரது வீடியோக்களை பார்த்து பல்வேறு இளைஞர்களும் முயற்சித்து வருகின்றனர்.

இந்திய இளைஞர் சாதனை

மணிப்பபூரைச் சேர்ந்தவர் நிரஞ்ஜோய் சிங் (24). இந்த இளைஞர் முன்னதாக விரல் நுனியில் அதிக முறை புஷ்-அப்கள் எடுத்து கின்னஸ் சாதனை படைத்திருந்தார். இந்நிலையில், அவரது சாதனையை அவரே முறியடிக்கும் விதமாக ஒரு நிமிடத்தில் 109 முறை புஷ் - அப்கள் எடுத்த கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

கிரிக்கெட், கால்பந்து போட்டிகளில் அவரவர் சாதனையை அவர்களே முறியடிப்பார்கள். அதேபோன்று நிரஞ்சோய் முன்னதாக 105 புஷ்-அப் என்ற பழைய சாதனையை  முறியடித்து புதிய கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ளார். இம்பாலில் உள்ள ஆஸ்டெக்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தால் இந்த சாதனை நிகழ்ச்சி நடந்தது.  நிரஞ்ஜோய் சிங்கின் கின்னஸ் சாதனையை மத்திய அமைச்சர்  கிரண் ரிஜ்ஜூ பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக  தனது டுவிட்டர் பதிவில், ஒரு நிமிடத்தில் அதிக புஷ்-அப்கள் செய்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த நிரஞ்ஜோய் சிங்கின் அசாத்தியமான சக்தியை பார்க்க ஆச்சர்யமாக இருக்கிறது. அவரது சாதனைக்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய பாதுகாப்பு படை வீரர்

எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த வீரர் ஒருவர், உறைய வைக்கும் கடும் குளிரில் 40 வினாடிகளுக்குள் 47 புஷ் அப்களை எடுத்து பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளார். இந்த   வீடியோ எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. கடும் குளிரில் முழுமையாக பனியால் நிரம்பிய தரையில் 47 புஷ்-அப்களை 40 வினாடிகளில் எடுத்து வியக்க வைத்தார். தற்போது இதுதொடர்பான வீடியோ  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

INDIAN BORDER, ARMY MAN, SOLDIAR, BSF, VIRAL VIDEO, PUSHUP, NIRNJOY, MANIPUR, YOUNGSTER, ONE MINUTES, 109 PUSH UP

மற்ற செய்திகள்