'யமஹா 1000 சிசி பைக்'... '300 கிமீ தலைதெறிக்க வைத்த வேகம்'... 'கடைசியில் நடந்த ட்விஸ்ட்'... இளைஞரின் அதிர்ச்சி வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இளம் வயதில் இருக்கும் சில இளைஞர்கள் தங்களது இருசக்கர வாகனத்தில் தலைதெறிக்க வைக்கும் வேகத்தில் செல்வது என்பது வாடிக்கையான ஒன்று. இது சில நேரங்களில் மோசமான விபத்துகளில் சென்று முடிவது வழக்கம். அதே நேரத்தில் அது சாலையில் செல்லும் மற்றவர்களுக்கும் சில நேரத்தில் ஆபத்தில் முடியும். அது போன்று சாகசமாகச் சென்ற இளைஞர் ஒருவர் வெளியிட்ட வீடியோ அவருக்கே ஆப்பாக அமைந்துள்ளது.

'யமஹா 1000 சிசி பைக்'... '300 கிமீ தலைதெறிக்க வைத்த வேகம்'... 'கடைசியில் நடந்த ட்விஸ்ட்'... இளைஞரின் அதிர்ச்சி வீடியோ!

இது தொடர்பாகப் பெங்களூர் மாநகர இணை ஆணையர் சந்தீப் பாட்டில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ''யமஹா 1000 சிசி பைக் ஒன்றில் இளைஞர் ஒருவர் வேகமாகச் செல்கிறார். அவர் செல்லும் வேகம் அந்த வீடியோவை பார்க்கும் நமக்கே இதயத் துடிப்பை எகிறச் செய்கிறது. 290 கிலோ மீட்டர் வேகத்தைக் கடந்த அந்த இளைஞர் கிட்டத்தட்ட 300 கிலோமீட்டரை நெருங்குகிறார். அப்போது வாகனங்கள் குறுக்கே வர தனது வேகத்தைக் குறைத்துக் கொள்கிறார். மீண்டும் வேகமாகச் செல்லும் அந்த இளைஞர், 300 கிலோமீட்டரை நெருங்குகிறார். இவை அனைத்தும் அந்த இளைஞரின் ஹெல்மெட் மீது பொருத்தப்பட்டுள்ள கேமரவில் பதிவாகியுள்ளது.  

இந்த வீடியோவை பகிர்ந்துள்ள இணை ஆணையர் சந்தீப் பாட்டில், அந்த இளைஞர் பகிர்ந்த வீடியோ அடிப்படையில் அந்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரது பைக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் அந்த நபர் சென்றது மிகவும் ஆபத்தான செயலாகும்'' என இணை ஆணையர் குறிப்பிட்டுள்ளார். திரிலுக்காக இளைஞர் வேகமாக'சென்று'எடுத்த வீடியோ அவருக்கே வினையாக வந்து முடிந்துள்ளது. இணையத்தில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்