'திடீரென அந்தரத்தில் தூக்கி வீசப்பட்ட இளைஞர்'... 'என்ன சத்தம்ன்னு திரும்பிய பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை'... உறைய வைக்கும் சிசிடிவி காட்சிகள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாசாலையோரமாகக் கிடந்த மின்சார வயர் பட்டு இளைஞர் ஒருவர் அந்தரத்தில் தூக்கி வீசப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூகவலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ ஒன்று காண்போரை அதிர்ச்சியில் உறைய வைக்கும் விதத்தில் அமைந்துள்ளது. சாலையோரமாக நின்ற ஆட்டோ ஒன்றை இளைஞர் ஒருவர் பக்கவாட்டில் தள்ள முயற்சிக்கிறார். அப்போது சாலையோரத்தில் அறுந்து கிடந்த மின்சார வயர் மீது அந்த இளைஞர் தெரியாமல் காலை வைத்துள்ளார். அடுத்த கணமே அந்த இளைஞர் 10 அடி தூரத்திற்குத் தூக்கி வீசப்பட்டார். திரைப்படங்களில் வரும் சண்டைக் காட்சிகளில் அடி வாங்கும் நபர் பறந்து சென்று விழுவது போல அந்த இளைஞர் அந்தரத்தில் செல்கிறார்.
இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் அந்த இளைஞரின் அலறல் சத்தம் கேட்டு சாலையில் நடந்து சென்ற பெண் ஒருவர் திரும்பிப் பார்த்த நிலையில், பறந்து வந்த அந்த இளைஞர் அந்த பெண்ணின் மீது விழுகிறார். இதில் இருவரும் படுகாயமடைந்தனர். பார்க்கும் போதே நெஞ்சை உறையவைக்கும் இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Man flung over a woman in a bizarre moment 🙄 pic.twitter.com/2Qp9iSX2Wp
— Jeno M Cryspin (@JenoMCryspin) July 30, 2020
மற்ற செய்திகள்