300 தடவை கடித்த பாம்பு.. கடைசியாக கடித்த பாம்பு என்ன? உயிருக்கு போராடும் வாவா சுரேஷ்.. பின்னணி

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளா: 300-க்கும் மேல் பாம்பு கடித்தும் அசராது இருந்த பிரபல பாம்பு பிடி வீரரான வாவா சுரேஷ் தற்போது உடல்நலம் தேறி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

300 தடவை கடித்த பாம்பு.. கடைசியாக கடித்த பாம்பு என்ன? உயிருக்கு போராடும் வாவா சுரேஷ்.. பின்னணி

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் வாவா சுரேஷ். பாம்பு பிடிக்கும் தொழிலை செய்து வரும் இவர் இதுவரை ஆயிரக்கணக்கான பாம்பை பிடித்து காட்டு பகுதியில் விட்டுவிடுவார்.

நாளொன்றுக்கு குறைந்தது 100 அழைப்புகள் வருமாம். பாம்பு பிடிப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. கவனம் தப்பினால் மரணம்தான். இதனாலேயே பாம்பு விஷ முறிவு மருந்து எப்போதும் வாவா சுரேஷ் வசம் இருக்கும். அதற்கான சிறப்பு அனுமதியும் அவருக்கு உள்ளது. இந்த முன்னெச்சரிக்கைதான் அவரின் உயிரையும் இதுநாள்வரை காத்து வந்திருக்கிறது.

பாம்புகள் மீது ஆர்வம் உருவாக காரணம்:

முதன் முதலில் பன்னிரண்டு வயது நிரம்பிய சுரேஷ் பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, குளத்துக்கரையில் பாம்பு ஒன்றை பார்த்துள்ளார். விஷமில்லாத தண்ணீர் பாம்பு அது. அதைப் பிடித்து வீட்டுக்குக் கொண்டுவந்துள்ளார். இதனைக் கண்டு பதறிய அவரின் அம்மா 'அந்தச் சனியனைக் கொண்டு வெளியே போடு' என கடிந்துள்ளார். பாம்பை வெளியே வீசி விட்டு வந்த, சுரேஷுக்கு செம அடி விழுந்தது. அன்றைக்கு விழுந்த அடிதான் அவரை அறியாமலேயே பாம்புகள் மீது ஆர்வத்தை உருவாக்கியதாக கூறியுள்ளார் சுரேஷ்.

300 முறை விஷப்பாம்புகள் தீண்டியுள்ளன:

சுரேஷின் 32 வருட பாம்பு பிடி வாழ்க்கையில், 50 ஆயிரத்திருக்கும் மேற்பட்ட பாம்புகளைப் பிடித்திருக்கிறார். இதுவரை, சுரேஷை 3000க்கும் மேல்  பாம்புகள் அவரை கடித்துள்ளன. 300 முறை விஷப்பாம்புகள் தீண்டியுள்ளன. 10 முறை ஐ.சி.யு-வில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்குப் பிறகு பிழைத்துள்ளார்.

அரசு வேலையை மறுத்த சுரேஷ்:

சுரேஷின் திறமையை மெச்சி, கேரள வனத்துறையில் அவருக்குப் பணி வழங்கப்பட்டது. 'மக்களுக்குச் சேவை செய்வதற்காக கடவுள் என்னை அனுப்பியிருக்கிறார் ' என்று அரசு வேலையை ஏற்க மறுத்து விட்டார். பாம்பு பிடிக்கும் இடங்களில் வாவா சுரேஷ் பெரும்பாலும் பணம் வாங்குவதில்லை. பாம்பு பிடிக்கும் இடங்களில் அவர்கள் கொடுப்பதை சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறார். அதுவும், போக்குவரத்துச் செலவுக்காக மட்டுமே. ரோட்டரி, லயன்ஸ் கிளப்புகள் சுரேஷுக்குத் தேவையான நிதியுதவியைச் செய்து வருகின்றன.

கால் தொடையில் கடித்த நல்ல பாம்பு:

இந்நிலையில் மீண்டும் நேற்று கோட்டயம் அடுத்த செங்கனாச்சேரி அருகே குறிச்சியில் ஒரு வீட்டிற்குள் நல்லபாம்பு பதுங்கி இருப்பதாக அவருக்கு தகவல் வந்துள்ளது. விரைந்து வந்த வாவா சுரேஷ், வீட்டுக்குள் பதுங்கி இருந்த நல்லபாம்பை பிடித்தார். பிடித்த பாம்பை சாக்கு பையில் போட முயன்றபோது, வாவா சுரேஷின் வலது கால் தொடையில் நல்லபாம்பு கடித்தது. மேலும், பாம்பு கடித்த சிறிது நேரத்திலேயே வாவா சுரேஷ் மயங்கி விழுந்தார். இதனால் அவரை மீட்டு உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தீவிர சிகிச்சை :

தற்போது கோட்டயம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வாவா சுரேஷுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் சுயநினைவின்றி இருப்பதாகவும், தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதோடு, அரசு மருத்துவமனையில் சிறிது உடம்பு தெரிவருவதாகவும், தற்போது வாவா சுரேஷிக்கு கொடுக்கப்பட்டுள்ள விஷமுறிவு மருந்து 48 மணி நேரம் கழித்து தான் செயல்படும் என்பதால் அதன் பிறகே எதுவாக இருந்தாலும் கூறமுடியும் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

வாவா சுரேஷ், பாம்பு, கேரளா, VAVA SURESH, SNAKE, KERALA

மற்ற செய்திகள்