'முதல்ல அவங்களுக்கு தான் தடுப்பூசி போடணும்...' அதுக்கு முன்ன கண்டிப்பா 'இந்த விஷயங்கள்'லாம் பண்ணியே ஆகணும்...! - மத்திய அரசின் வழிகாட்டுதல்கள்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்திய அரசு கடந்த திங்கட்கிழமையன்று, கொரோனா வைரஸ் தடுப்பூசி மையங்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தடுப்பு மருந்து சோதனையில் ஒவ்வொரு அமர்விலும் ஒரு நாளைக்கு 100-200 பேருக்கு தடுப்பூசி போடுவது என திட்டமிடப்பட்டுள்ளது.
அண்மையில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மட்டுமே தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி போடப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
"கோவிட் -19 தடுப்பூசி செயல்பாட்டு வழிகாட்டுதல்களின்படி, தடுப்பூசி கேரியர், தடுப்பூசி குப்பிகளை அல்லது ஐஸ் கட்டிகளை சூரிய ஒளியில் படாமல் இருக்க வேண்டும் எனவும். அதை தவிர்க்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்று பி.டி.ஐ மையம் வெளியிட்டுள்ளது.
தடுப்பூசி குழுவில் ஐந்து உறுப்பினர்கள் இருப்பார்கள் எனவும், ஒவ்வொரு அமர்வும் ஒரு நாளைக்கு 100 பயனாளிகளுக்கு திட்டமிடப்பட வேண்டும். அமர்வு தளத்தில் போதுமான வசதிகள் மற்றும் காத்திருப்பு அறை மற்றும் கண்காணிப்பு அறை போன்றவற்றை ஏற்படுத்த கூறப்பட்டுள்ளது.
மேலும் வைரஸ் தடுப்பூசி முதலில் சுகாதாரப் பணியாளர்கள், முன்னணி தொழிலாளர்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்படும், அதன்பிறகு 50 வயதிற்கு குறைவான நபர்கள், இதர மக்களுக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசியின் முதல் கட்டத்தின் கீழ், கிட்டத்தட்ட 30 கோடி மக்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. தடுப்பூசி போடுவதற்காக முன்பதிவு செய்ய வாக்காளர் ஐடி, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் மற்றும் ஓய்வூதிய ஆவணம் , புகைப்படம் உள்ளிட்ட 12 அடையாள ஆவணங்கள் தேவைப்படும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
மற்ற செய்திகள்