'பசியில்' பச்சைத் தாவரங்களை 'உண்ட' குழந்தைகள்... 'வைரலான புகைப்படம்...' 'அதிர்ந்து' போன 'அதிகாரிகள்'... 'அதன்பின்' செய்த 'நெகிழ வைக்கும்' செயல்...
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரபிரதேசம் மாநிலம், வாரணாசி அருகே, கொரைப்பூர் என்ற கிராமத்தில் சில குழந்தைகள் பச்சைத் தாவரங்களிலிருந்து எதையோ சாப்பிடுவது போன்ற புகைப்படம் வெளியானதால் அதிகாரிகள் அதிர்ந்து போயினர். உடனே அரிசி, பருப்பு, உள்ளிட்ட ரேஷன் பொருட்களுடன் சென்று குழந்தைகளின் குடும்பங்களுக்கு வழங்கினர்.
சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வைரலானது. அதில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 6 குழந்தைகள் செடிகளில் இருந்த ஏதோ ஒன்றை சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர். இந்த புகைப்படம் வைரலானதையடுத்து, புகைப்படம் குறித்து விசாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
விசாரணையில் குழந்தைகள் வாரணாசி அருகே கொரைப்பூர் கிராமத்தில் உள்ள முசாஹர் சமூகத்தைச் சேர்ந்த ஆறு குழந்தைகள் என்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த வாரணாசியின் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட குழந்தைகளின் குடும்பங்களுக்கு உதவி செய்ய விரைந்தனர்.
இச்சம்பவம் குறித்து உள்ளூர் செய்தியாளர் மூலம் தகவலறிந்த் பராகன் நிலைய அதிகாரி சஞ்சய் சிங் என்பவர் மாவட்ட துணைப்பிரிவு மாஜிஸ்திரேட்டுக்கு தகவல் அளித்தார். அவர் இப்பகுதியில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டள்ளதாக புகார் அளித்தார். இதையடுத்து மாஜிஸ்திரேட் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று அதிகாரிகள் உதவுமாறு உத்தரவிட்டார்.
இதையடுத்து குழந்தைகளின் குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி, சமையல் எண்ணெய், உருளைக்கிழங்கு மற்றும் சில அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. சில குழந்தைகளின் பெற்றோர் தினசரி கூலித் தொழிலாளர்களாகவும், மற்றவர்கள் தெருக்களில் பிச்சை எடுத்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாவட்ட நீதிபதி கவுசல் ராஜ் சர்மா கூறுகையில், “இந்த கிராமத்தின் குழந்தைகள் செடியிலிருந்து ஒருவகை பருப்பை சாப்பிடுவதாகத் தெரிவித்தார். புகைப்படத்தில் காணப்பட்ட குழந்தைகளும் அதுபோன்ற பருப்புகளைத் தான் சாப்பிட்டனர் எனக் குறிப்பிட்டார். இந்த குழந்தைகளின் குடும்பங்கள் ரேஷன் கார்டு வைத்திருக்கின்றனர் என்றும், இந்த மாதத்திற்கான ரேஷன் பொருட்களையும் அவர்கள் பெற்றுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். அவர்களுக்கு இன்று கூடுதல் ரேஷனும் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.