இந்த தண்ணிய குடிக்குறது ரிஸ்க்...! 'பச்சை கலராக மாறிய கங்கை...' என்ன காரணம்...? 'இந்த கலர்ல மாறுறது ரொம்ப ஆபத்து...' - எச்சரிக்கும் விஞ்ஞானிகள்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவின் புகழ்மிக்க கங்கை நதி பளிர் பச்சையாக மாறிய சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் இருக்கும் புகழ்மிக்க கங்கை நதி, கடந்த கொரோனா ஊரடங்கின் போது எந்த வித மாசும் இல்லாமல் தூய்மையாக இருந்தது. ஆனால் இந்த இரண்டாம் அலை கொரோனா ஊரடங்கின் போது பச்சை நிறமாக மாறியுள்ளது.
அதோடு கங்கை நதி நீரின் இந்த மாற்றம் நீரை நச்சுதன்மை உடையதாக மாற்றலாம் எனவும் விஞ்ஞானிகள் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் கங்கையின் இந்த நிற மாற்றம் குறித்து உள்ளூர்வாசி ஒருவர் கூறும் போது, 'பொதுவாக மழைக்காலங்களில் அதிகப்படியான நீர்வரத்து காரணமாக ஏரி, குளங்களில் இருந்து பாசி மற்றும் பிற நீர் தாவரங்கள் கங்கைக்குள் வந்துவிடுவதால் கங்கை நதி மழைக்காலங்களில் இளம் பச்சை வண்ணத்தில் இயல்பாக காட்சி தரும்.
இப்போது இருக்கும் பச்சை நிறம் போல் அடர்த்தியாக இருக்காது. அதோடு தண்ணீரில் துர்நாற்றம் வீசுவதால் மேலும் எங்களுக்கு அச்சமாக உள்ளது' எனக் கூறியுள்ளார்.
கங்கையின் இந்த நிறமாற்றம் குறித்து பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் கங்கை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் பி.டி.திரிபா கூறும் போது, 'கங்கையின் இந்த பச்சை நிற வண்ணத்திற்கு மைக்ரோசிஸ்டிஸ் என்ற பாசி தான் காரணம்.
இந்த மைக்ரோசிஸ்டிஸ் பாசி பொதுவாக கங்கை போன்ற ஓடும் நதியில் இருக்காது. ஆனால் தண்ணீர் ஓட்டம் தடைபடும் போது, ஊட்டச்சத்துக்களுக்கான நிலை உருவாக்கப்படுகிறதோ, அங்கு மைக்ரோசிஸ்டிஸ் வளரத் தொடங்குகிறது. தற்போது கங்கையில் காணப்படும் பாசி அருகிலிருக்கும் ஏரி, குளங்களில் இருந்து வந்திருக்கலாம்.
நீண்ட நாட்கள் நீர் ஓட்டம் இல்லாமல் இதே நிலையில் இருந்தால், அது neurotoxin microcystin என்பதை வெளியிடும், அது நீரில் உள்ள உயிரினங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியது' என்று பி.டி.திரிபாதி கூறினார்.
இதே கருத்தை கூறிய சூழலியல் மாசு விஞ்ஞானியான க்ரிபா ராம், 'கங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பச்சை நிற படிவம் ஒன்றும் பயப்படுபடியான ஒன்று கிடையாது மார்ச் முதல் மே மாதம் வரை நீடிக்கும் இயல்பான விஷயம் தான். அதே நேரத்தில் இந்த நீரில் குளித்தால் தோல் நோய் ஏற்படும் என்றும், குடித்தால் கல்லீரலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்' எனவும் எச்சரித்துள்ளார்.
மற்ற செய்திகள்