இந்தியாவின் மிக வேகமான ரயில்.. டெஸ்ட்டிங்கே தீயா இருக்கே.. ரயில்வே அமைச்சர் பகிர்ந்த பட்டாசான வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவின் மிக வேகமான ரயிலான வந்தே பாரத்-ன் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்வை மத்திய ரயில்வே அமைச்சர் பகிர்ந்திருக்கிறார். இதனிடையே இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Also Read | நடிகை மரணமடைந்த விவகாரம்.. சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போலீஸ்.. வெளிச்சத்துக்கு வந்த மர்மம்..!
வந்தே பாரத்
இந்தியாவின் மிக வேகமான ரயில் என கருதப்படும் வந்தே பாரத் ரயில் மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டிருக்கிறது. கடந்த வருட சுதந்திர தினத்தின் போது, 75-வது சுதந்திர தின பெருவிழாவை முன்னிட்டு நாடு முழுவதும் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய, அதிவேக வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, முதற்கட்டமாக அடுத்த ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதிக்குள் 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தற்போதைய நிலையில் இந்தியாவில் இரண்டு இடங்களில் இந்த ரயில் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. புதுடெல்லி-வாரணாசி இடையே 760 கி.மீ. தூரத்துக்கு இயக்கப்படும் இந்த ரயில் மணிக்கு 95 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டுவருகிறது. அதேபோல, மற்றொரு ரயில் புதுடெல்லியில் இருந்து ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ஸ்ரீமாதா வைஷ்ணவா தேவி கத்ரா ரெயில் நிலையம் வரை இயக்கப்படுகிறது. இது மணிக்கு 82 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது.
அதிவேக ரயில்
இந்நிலையில், இந்த ரயில் அதிகபட்சமாக 200 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படும் அளவுக்கு திறன் கொண்டது. முழுவதும் குளிரூட்டப்பட்ட 16 பெட்டிகளை கொண்ட இந்த ரயிலின் வேகத்தை அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்திருக்கிறது. இதற்கான சோதனை முயற்சி ராஜஸ்தான் மாநிலத்தில் நடத்தப்பட்டது.
மணிக்கு அதிகபட்சமாக 180 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் இயக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. ராஜஸ்தானின் கோட்டா-நாக்டா பிரிவில் 110 கிலோமீட்டர் தூரம் இந்த ரயில் இயக்கப்பட்டிருக்கிறது. இந்த வீடியோவை மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வனி வைஷ்ணவ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில், "வந்தேபாரத்-2 வேக சோதனை கோட்டா-நாக்டா இடையே 120/130/150 & 180 கிமீ வேகத்தில் நடைபெற்றது" எனக்குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
#VandeBharat-2 speed trial started between Kota-Nagda section at 120/130/150 & 180 Kmph. pic.twitter.com/sPXKJVu7SI
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) August 26, 2022
மற்ற செய்திகள்