"பள்ளி மாணவிகளுக்கு என்னங்க ஆச்சு??.." கும்பலாக கதறிய மாணவிகள்.. இந்தியாவை பீதியில் உறைய வைத்த சம்பவம்..
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில், திடீரென மாணவிகள் செய்த செயலை கண்டு அங்கிருந்த அனைவரும் அதிர்ந்து போனது மட்டுமில்லாமல், இது தொடர்பான வீடியோவும் பலரையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.
Also Read | "வயசு 27 ஆகுதுங்க.. ஆனா பாக்க சின்ன பையன் மாதிரி இருக்கேன்னு சொல்லி.." வேதனையில் புலம்பும் இளைஞர்..
உத்தரகாண்ட் மாநிலம், பாகேஷ்வர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் அமைந்துள்ள அரசு பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் தான், இந்த பள்ளியில் உள்ள பெரும்பாலான மாணவிகள், திடீரென ஒரு மாதிரி வெறி பிடித்தது போல தரையில் விழுந்து கத்தி, கதறி, கூச்சல் போடவும் மாணவிகள் தொடங்கியுள்ளன.
மிகவும் பயங்கரமாக மாணவ மாணவிகள் நடந்து கொள்வதை பார்த்த அங்கிருந்த ஆசிரியர்கள் கடும் அச்சத்தில் உறைந்து போயினர். அது மட்டுமில்லாமல், மாணவிகள் தங்கள் வயதை விட அதிகமாக ஆவேசத்துடன் காணப்பட்டதால், அது இன்னும் அவர்களுக்கு அச்சத்தை அதிகப்படுத்தி உள்ளது. பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் மிகவும் பயந்து போனார்கள்.
இது தொடர்பாக இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் பேசுகையில், "எங்கள் பள்ளியில் சில மாணவிகள் விசித்திரமாக நடந்து கொள்ள தொடங்கினார்கள். அவர்கள் சத்தமாக அழுவது, கூச்சல் போடுவது, தலையை குனிந்து உட்காருவது என பல வினோதமான நிகழ்வுகளை நிகழ்த்தி காட்டினர். இது கண்டு பயந்து நாங்கள் உடனடியாக மாணவிகளின் பெற்றோரிடம் இது பற்றி தெரிவித்தோம். அவர்கள் பயத்தில் பூசாரியை அழைத்து மந்திரம் செய்யவும் சொன்னார்கள். அப்படி செய்த பின்னர், ஓரளவு நிலைமை கட்டுக்குள் வந்தது. இருந்தாலும் சில குழந்தைகள் அப்படி தொடர்ந்து நடந்து கொள்கின்றனர்" என தெரிவித்துள்ளார்.
இந்த பள்ளிக்கு கல்வித்துறை அதிகாரிகள் வந்த சமயத்தில் கூட, குழந்தைகள் இதே போல வினோதமாக நடந்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. தொடர்ந்து பள்ளி வளாகத்திற்கு பூஜை, ஹோமம் உள்ளிட்டவற்றை செய்தால் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்றும் குழந்தைகளின் பெற்றோர் அறிவுறுத்தியதாக கூறப்படும் நிலையில், இதற்கு கல்வித் துறை அதிகாரிகள் சம்மதம் தெரிவிக்கவில்லை. மேலும் டாக்டர்களை வரவழைத்து குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகேஷ்வர் பகுதியில் நடந்தது போல அருகில் உள்ள மற்ற சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளிலும் இதுபோல மாணவிகள் விசித்திரமாக நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இப்படி ஒரு குழுவாக இணைந்து கொண்டு, பலர் ஒன்றாக இது மாதிரி கத்தி, கூச்சல் போட்டு விசித்திரமாக அல்லது அசாதாரணமாக நடந்து கொள்வது என்பது மாஸ் ஹிஸ்டீரியா என அழைக்கப்படும். இது மன அழுத்தத்தால் தூண்டப்பட்டு வெறி பிடித்தது போன்ற உளவியல்களை உள்ளடக்கிய மனநிலை என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், தனியாக ஒரு நபருக்கு ஹிஸ்டீரியா இருந்தாலும், அது சுற்றி இருக்கிறவர்களை பாதிக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த உடல் பிரச்சினையை சரி செய்ய அதிகாரப்பூர்வ சிகிச்சை எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது. கும்பலாக அரசு பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் கத்தி கூச்சல் போட்டு மிகவும் அசாதாரணமாக நடந்து கொண்ட சம்பவம், இந்திய அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்