வீடுகளில் விழும் விரிசல்.. மண்ணில் புதைந்து போகும் இந்திய நகரம்?.. காரணம் தெரிஞ்சு பீதியில் உறைந்த மக்கள்.. திகிலூட்டும் பின்னணி!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் உள்ள நகரம் ஒன்று கொஞ்சம் கொஞ்சமாக மண்ணில் புதையுண்டு வருவது தொடர்பான செய்தி, தற்போது நாட்டு மக்கள் அனைவரையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் அமைந்துள்ளது ஜோஷிமத் என்ற பகுதி. இந்த நகரம், இந்தியா மற்றும் சீனா நாடுகள் எல்லையின் கேட் வேயாக உள்ளது. அதே போல, இந்த நகரின் வழியாக தான் புனித தலமான பத்ரிநாத் கோவிலுக்கும் செல்ல முடியும் என தெரிகிறது. இது தவிர அவுலி மலைத் தொடருக்கும் இந்த நகரம் வழியாக தான் செல்ல முடியும் என தகவல்கள் கூறுகின்றது.
இதனால், மிக முக்கியமான நகரமாக பார்க்கப்படும் இந்த ஜோஷிமத் பகுதியில் தான் வீடுகள் மற்றும் கடைகள் உள்ளிட்ட இடங்களில் விரிசல் விழுவதாகவும் சில இடங்கள் மண்ணில் புதைந்து போவதாகவும் தகவல்கள் கூறுகின்றது. சமீப காலமாக இந்த சம்பவம் அரங்கேறி வரும் நிலையில் திடீரென எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் இப்படி வீடுகளில் விரிசல் விழுவதும் இடங்கள் மண்ணில் புதைவதும் அப்பகுதி மக்களை குழப்பத்திலும் அதே வேளையில் பயத்திலும் ஆழ்த்தி இருந்தது.
இது தொடர்பாக குழு ஒன்று நியமிக்கப்பட்டு இதற்கான காரணம் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது தெரிய வந்த சில தகவல்கள் மக்களை மேலும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.
ஜோஷிமத் பகுதியில் அதிக நிலச்சரிவு இருப்பதாகவும் சிறிய மழை பெய்தால் கூட நிலச்சரிவு ஏற்படும் என்றும் குறிப்பிடுகின்றனர். அதே போல இந்த மொத்த நகரத்தின் அடித்தளம் என்பது நிலைத்தன்மை உடையதாக இல்லை என்றும் தெரிகிறது. இதன் காரணமாக தான் அங்குள்ள கடைகள் மற்றும் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் விரிசல் ஏற்படுவதாகவும் தகவல்கள் கூறுகின்றது.
அதே போல இந்த ஜோஷிமத் பகுதி குறிப்பிட்ட எடையை தான் தாங்கும் என்றும் ஆனால் அங்குள்ள மக்கள் நிறைய கட்டிடங்களை அங்கு கட்டி உள்ளார்கள் என்றும் தகவல்கள் கூறுகின்றது. இதே போல, அங்குள்ள ஆற்றில் அரிப்பு ஏற்பட்டதுடன் மட்டுமில்லாமல் சாக்கடை கூட நிறைய பிரச்சனைகளை உண்டு பண்ணி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
கடந்த 1976 ஆம் ஆண்டு இது குறித்து முதலில் கண்டுபிடிக்கப்பட தற்போது இதனை சரி செய்ய என்ன வழிகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்தும், மாநில அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
Also Read | ஆந்திராவில் அதிர்ச்சி.! கூட்ட நெரிசலில் மக்கள் பலி.. ரூ. 10 லட்சம் நிதி அறிவித்து சந்திரபாபு நாயுடு இரங்கல்
மற்ற செய்திகள்