"ஒரு வருஷத்துல பேரக்குழந்தைய பெத்துக் குடுங்க, இல்லன்னா.." - மகன், மருமகளுக்கு எதிராக.. கோர்ட் வாசலை நாடிய தம்பதி

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பொதுவாக, ஒரு குடும்பத்திற்குள் பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகளுக்கு மத்தியில், சொத்து பிரச்சனை நடப்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம்.

"ஒரு வருஷத்துல பேரக்குழந்தைய பெத்துக் குடுங்க, இல்லன்னா.." - மகன், மருமகளுக்கு எதிராக.. கோர்ட் வாசலை நாடிய தம்பதி

Also Read | கிழிஞ்ச ஜீன்ஸ் பாத்திருப்போம்.. இப்படி ஒரு ஷூ-வை பாத்திருக்கீங்களா?.. இதுதான் இப்போ அந்த நாட்டுல ஃபேஷனாம்.. விலையை கேட்டா ஆடிப்போய்டுவீங்க..!

இல்லையெனில், உடன் பிறப்புகளுக்கு இடையே சொத்து பிரிவினை பெயரில்  தகராறு ஏற்பட்டு, வழக்குகள் உருவாவதையும் நான் பார்த்திருப்போம்.

ஆனால், இவை அனைத்தையும் விட சற்று வித்தியாசமாக பெற்றோர்கள் கொடுத்துள்ள வழக்கு ஒன்று, பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

தம்பதி கொடுத்த வழக்கு..

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹரித்வார் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சீவ் ரஞ்சன் பிரசாத். BHEL நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வந்த இவர், ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டார். இவரது மனைவியின் பெயர் சாதனா பிரசாத். தனது பணி ஓய்வுக்கு பிறகு, மனைவி சாதனாவுடன் தனியாக வசித்து வருகிறார் சஞ்சீவ் பிரசாத்.

uttarakhand couple demands son and daughter in law

அப்படி ஒரு சூழ்நிலையில் தான், தன்னுடைய ஒரே மகன் மற்றும் மருமகள் மீது வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளது, பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. சஞ்சீவ் - சாதனா தம்பதியரின் ஒரே ஒரு மகனான ஷ்ரேய் சாகருக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு, சுபாங்கி சின்ஹா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது.

ஷ்ரேய் சாகர் விமானியாக பணிபுரிந்து வரும் நிலையில். அவரது மனைவி சுபாங்கி, நொய்டாவில் பணிபுரிந்து வருகிறார். ஆறு ஆண்டுகள் ஆகியும், இருவருக்கும் குழந்தை எதுவுமில்லை. இன்னொரு பக்கம், பொருளாதார ரீதியாகவும், சஞ்சீவ் மற்றும் சாதனா ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்படி ஒரு சூழ்நிலையில் தான், வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார் சஞ்சீவ்.

5 கோடி இழப்பீடு வேணும்..

இது பற்றி பேசும் அவர், "எனது பணம் அனைத்தையும் மகனுக்காக செலவு செய்தேன். அமெரிக்காவில் அவருக்கு பயிற்சி அளிக்கவும் உதவி செய்தேன். இப்போது என்னிடம் பணம் எதுவுமில்லை. வங்கியில் இருந்து கடன் வாங்கி, வீடு கட்டினோம். நாங்கள் பொருளாதார ரீதி ஆகவும், தனிப்பட்ட விதத்திலும் நிறைய சிரமப்பட்டுள்ளோம். எங்களின் மனுவில், மகன் மற்றும் மருமகளிடம் இருந்து தலா 2.5 கோடி ரூபாய் இழப்பீடாக தர வேண்டும் என கேட்டுள்ளோம்" என தெரிவித்துள்ளார்.

uttarakhand couple demands son and daughter in law

அதே போல அவரது மனுவில், "எனது மகனுக்கு திருமணம் ஆகி, 6 ஆண்டுகள் ஆகியும், குழந்தையை பெற்றுக் கொள்ளவில்லை. இதனால், நானும் எனது மனைவியும் அதிக அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். அடுத்த ஒரு ஆண்டுக்குள் பேரக் குழந்தையை பெற்று தர வேண்டும். இல்லை என்றால், 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்" என குறிப்பிப்பட்டுள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

UTTARAKHAND, COUPLE DEMANDS, SON, DAUGHTER IN LAW, உத்தரகாண்ட், மகன், மருமகள்

மற்ற செய்திகள்