Naane Varuven M Logo Top

500 மீ ஆழமுள்ள பள்ளத்தாக்கு.. திருமணத்தில் கலந்துகொள்ள சென்ற உறவினர்களுக்கு நேர்ந்த சோகம்.. பிரதமர், குடியரசுத்தலைவர் இரங்கல்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்திரகாண்ட் மாநிலத்தில் திருமணத்தில் கலந்துகொள்ள சென்றவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

500 மீ ஆழமுள்ள பள்ளத்தாக்கு.. திருமணத்தில் கலந்துகொள்ள சென்ற உறவினர்களுக்கு நேர்ந்த சோகம்.. பிரதமர், குடியரசுத்தலைவர் இரங்கல்..!

Also Read | புயலுக்கு பயந்து வீட்டுக்குள்ள முடங்கிய குடும்பம்.. அத்தனை பேரையும் காப்பாத்திய ஒற்றை ஜன்னல் .. வைரலாகும் புகைப்படம்..!

சோகம்

உத்திரகாண்ட் மாநிலம், பவுரி மாவட்டத்தில் உள்ள பிரோன்கல் பகுதியில் நேற்று இந்த துரதிருஷ்ட சம்பவம் நேர்ந்திருக்கிறது. இரவு நேரத்தில் திருமணத்தில் கலந்துகொள்ள பேருந்தில் சென்றிருந்த உறவினர்கள் விபத்தில் சிக்கியதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர். இந்த பேருந்து 500 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்திருக்கிறது. பேருந்தில் 45 பேர் இருந்ததாகவும் அதில் 25 பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்திருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

Uttarakhand Bus Falls Into Gorge 25 Members deceases

மேலும், விபத்து நேரந்த இடத்தில் இருந்து 20 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது. மாநில காவல்துறை தலைவர் அசோக் குமார் இதுபற்றி பேசுகையில், "துமகோட்டின் பிரோகல் பகுதியில் நேற்று இரவு நடந்த பேருந்து விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். காவல்துறை மற்றும் SDRF (மாநில பேரிடர் மீட்புப் படை) ஒரே இரவில் 21 பேரைக் காப்பாற்றியது. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.

இரங்கல்

இந்நிலையில், இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இதுகுறித்து ட்வீட் செய்திருக்கிறார். அதில், விபத்து குறித்த தகவல்களை கேட்டு வேதனை அடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். இதனிடையே பிரதமர் அலுவலகம் இதுபற்றி செய்திருந்த ட்வீட்டில்,"உத்தரகாண்ட் மாநிலம் பௌரியில் நடந்த பேருந்து விபத்து இதயத்தை உலுக்குகிறது. இந்த துயரமான நேரத்தில் எனது எண்ணங்கள் முழுவதும் உயிரிழந்த குடும்பத்தினரை பற்றியே இருக்கின்றன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாதிப்படைந்தவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும்" என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Uttarakhand Bus Falls Into Gorge 25 Members deceases

இதனிடையே உத்திரகான்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு, பாதிப்படைந்தவர்களின் குடும்பத்தினருடன் மாநில அரசு துணை நிற்கும்  எனத் தெரிவித்திருக்கிறார். திருமணத்தில் கலந்துகொள்ள சென்றவர்களின் பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் இந்தியா முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | 3 இடத்துல எலும்பு முறிவு.. பிரபல இங்கிலாந்து வீரருக்கு நேர்ந்த பரிதாபம்.. இனி ஒரு வருஷத்துக்கு ரெஸ்ட் தான்.. ரசிகர்களை கலங்க வச்ச புகைப்படம்..!

UTTARAKHAND, BUS FALLS, UTTARAKHAND BUS FALLS, GORGE

மற்ற செய்திகள்