மூணே 'மூணு' நாள் தான்...! 'எல்லாம் சரி ஆயிடும்...' 'போர்டு எழுதி வைத்த நபர்...' 'குவிந்த பொதுமக்கள்...' - வீட்டை 'சோதனையிட்ட' போது காத்திருந்த அதிர்ச்சி...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திரப்பிரதேசத்தில் கொரோனா வைரஸிற்கு மருந்து இருப்பதாக கூறி பொது மக்களுக்கு விற்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக மருத்துவ உலகமே கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்க திண்டாடி வரும் நிலையில், கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடித்ததாக போர்டு எழுதி வைத்த போலி மருத்துவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் சந்தோலி பீதாம்புராவைச் சேர்ந்தவர் 29 வயதான வினீத் பிரசாதி. இவர் தற்போது கேரளாவில் வசித்து வருகிறார். போலி மருத்துவராக செயல்பட்டு வரும் இவர், தான் தங்கியிருந்த வீட்டின் வெளியே 'மூன்று நாட்களுக்குள் கொரோனாவை குணப்படுத்துவேன்' என போர்டு வைத்து சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
இதனை அறிந்த கேரள போலீசார் வினீத் பிரசாதியை உடனடியாக கைது செய்துள்ளனர். வடமாநிலத்தை சேர்ந்த இவர், கேரளாவில் இருக்கும் வெளி மாநில தொழிலாளர்களை குறி வைத்து இந்த வியாபாரம் செய்து வந்துள்ளார்.
அவரின் வீட்டை சோதனை செய்தப்போது நிறைய மசாலா பொருட்கள் அடங்கிய பொடிகள் கைப்பற்றப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட வினீத் பிரசாதி மீது சட்ட விரோதமாக பொதுமக்களுக்கு போலி மருத்துவம் பார்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மற்ற செய்திகள்