ஒருவேளை இது கனவா இருக்குமோ...! 'நல்ல தூக்கம்...' 'கண்ணு முழிச்சு பார்த்தா...' - கூரைக்கு மேல கட்டுக்கட்டா பணம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்தரப் பிரதேச மாநிலத்தில் வீட்டின் கூரைக்கு மேலேயே கட்டுக்கட்டாக பணம் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒருவேளை இது கனவா இருக்குமோ...! 'நல்ல தூக்கம்...' 'கண்ணு முழிச்சு பார்த்தா...' - கூரைக்கு மேல கட்டுக்கட்டா பணம்...!

உத்தரப் பிரதேச மாநிலத்தின் மீரட் பகுதியில் வசித்து வரும் வருண் ஷர்மா என்பவர்  காலையில் தூக்கம் முழித்து பார்த்த போது தனது வீட்டுக்கூரை மேல் இரண்டு பைகள் இருப்பதை பார்த்துள்ளார். அந்த பைகளை எடுத்துப் பார்த்தபோது கட்டுக்கட்டாக பணமும், நகைகளும் இருந்துள்ளன.

இதனைக் கண்டு கனவா அல்லது நிஜமா என்று ஒரு நிமிடம் குழம்பி போயுள்ளார். அதிர்ச்சியடைந்த அவர், அருகில் உள்ள போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். ஏனெனில், அவரது அண்டை வீட்டுக்காரரான பவன் சிங்கால் என்ற தொழிலதிபரின் வீட்டில் இரு தினங்களுக்கு முன்னர் சுமார் ரூ.40 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் நகைகள் கொள்ளை போயிருந்ததை கேள்விப்பட்டிருந்தார்.

வருண் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், அவர் வீட்டு கூரையில் இருந்த இரு பைகளையும் கைபற்றினர். அதில், ரூ.14 லட்சம் ரொக்கப்பணம் இருந்ததாகவும், நகைகள் மீதான மதிப்பிடு நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

பவன் சிங்கால் வீட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வரை நேபாளத்தை சேர்ந்த ராஜு என்பவர் வேலை பார்த்து வந்தார். நீண்ட நாட்களுக்கு பின்னர் பவன் சிங்கால் குடும்பத்தினர் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது வீட்டுக்கு வந்துள்ளார். ராஜு ஏற்கனவே நல்ல அறிமுகம் இருப்பதால் அங்கு காவலுக்கு இருந்தவர்கள் அவரை எளிதாக வீட்டினுள் அனுமதித்துள்ளனர். வீட்டுக்குள் சென்ற ராஜு நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டுச் சென்றுள்ளார். இதனை பார்த்த செக்யூரிட்டி ஒருவரும் உடந்தை என கூறப்படுகிறது.

இவை அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளன. அதனடிப்படையில், அந்த செக்யூரிட்டியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து பணம் மற்றும் நகைகளை பறிமுதல் செய்துள்ளதுடன், கொள்ளையடித்து சென்ற ராஜுவை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், கொள்ளையடித்த பணம் மற்றும் நகைகளை அப்புறம் சாகவாசமாக வந்து எடுத்துக் கொள்ளலாம் என்று வீட்டின் கூரையில் அவற்றை வைத்துச் சென்றிருக்கலாம் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

மற்ற செய்திகள்