'உருவானது பர்வோ வைரஸ்...' 'இது பரவுறதுல ஜெட் ஸ்பீடு...' - இதுக்கெல்லாம் ஒரு முடிவே இல்லையா...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சீனாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி வரலாறு காணாத இழப்புகளை ஏற்படுத்தியது.

'உருவானது பர்வோ வைரஸ்...' 'இது பரவுறதுல ஜெட் ஸ்பீடு...' - இதுக்கெல்லாம் ஒரு முடிவே இல்லையா...!

இந்த நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவத்தொடங்கி  காகங்கள் இறந்துகிடந்தது.

இதனை பாதிப்புகளில் இருந்தும் இன்னும் மக்கள் மீண்டு வராத நிலையில் தற்போது பர்வோ என்ற வைரஸ்  நாய்களுக்கு பரவத்தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் இதுவரை எட்டு நாய்கள் பர்வோ வைரஸுக்கு பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்த எட்டு நாய்களின் பிரேதங்களை பரிசோதனை செய்ததில், அவற்றின் குடல் சிதைந்துவிட்டதாகவும், இறப்பதற்கு முன் ரத்த வாந்தி எடுத்ததாகவும் தெரியவந்துள்ளது.

பர்வோ வைரஸ் உயிர்க்கொல்லி வைரஸ் மட்டுமல்லாமல் மிக வேகமாக பரவக்கூடியது. இந்த வைரஸ் நாய்களின் இரைப்பை மற்றும் குடலை தாக்கி பிரச்சினைகளை உண்டாக்குகிறது என கூறப்படுகிறது. உரிய சிகிச்சை அளிக்காவிட்டால் பாதிக்கப்பட்ட நாய் இறந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.

கான்பூரில் உள்ள பிதர்கோன், கியோந்தரா ஆகிய பகுதிகளில் மேற்கூறிய எட்டு நாய்களும் இறந்து கிடந்துள்ளன. இந்த சம்பவம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்