'சிறுவனை விடாம தொரத்தும் பாம்பு...' 'ஒரே மாசத்துல 8 தடவ கடி...' - எந்த ஏரியா போனாலும் தேடி வரும் அதிசயம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திரப்பிரதேசத்தில் வசிக்கும் சிறுவன் ஒருவனை ஒரே மாதத்தில் 8 முறை பாம்பு கடித்த சம்பவம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் ராம்புர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் யாஷ்ராஜ் மிஷ்ரா. இவரை பாம்புகள் பல முறை கடிப்பதும், அதற்காக அடிக்கடி மருத்துவமனை சென்று சிகிச்சை பெறுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.
இதுகுறித்து கூறும் யாஷ்ராஜ் மிஷ்ராவின் தந்தை சந்திரமௌலி மிஷ்ரா, என் மகனை அடிக்கடி பாம்பு கடிப்பது எனக்கு மட்டுமில்லை எங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஏன் மருத்துவர்களுக்கும் கூட குழப்பத்தை உண்டாக்குகிறது. தற்போது மூன்றாவது முறை ஒரே பாம்பால் எனது மகன் கடிபட்டதை அடுத்து, அவனை பஹதுர்புர் கிராமத்தில் உள்ள எனது உறவினர் வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டேன்.
அங்கே சென்றும் கூட அவன் அதே பாம்பை பார்ப்பதாக கூறுகிறான். அவன் என்னிடம் சொல்லிய அடுத்த நாளே அந்த பாம்பு அவனை கொத்தியது. அதனால் தான் தற்போது அவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.
இதுவரை அவனை 8 முறை பாம்பு கடித்துள்ளது. நாங்கள் எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்து பார்த்தோம், பாம்பாட்டியை வைத்து பாம்பு பிடிக்க முயன்றோம், அதோடு பாம்பு பிடிப்பவர்கள் கூறும் வைத்தியங்களையும் பார்ப்போம், பல பூஜைகளும் செய்துவிட்டோம். ஆனால் இதுவரை ஒரு பலனும் இல்லை.
ஏன் எங்கள் பையனை மட்டும் பாம்பு குறி வைக்கிறது எனத் தெரியவில்லை. இதனாலேயே என் மகன் மன உளைச்சலில் அவதி படுகிறான். எப்போதும் பாம்பு குறித்த அச்சத்தோடு இருக்கிறான். எப்போது இதற்கு ஒரு முடிவு வரும் என எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்.' என மிகுந்த மன வேதனையுடன் தெரிவிக்கிறார் சிறுவனின் தந்தை சந்திரமௌலி.
மற்ற செய்திகள்