ஒரே வீட்ல 4 IAS, IPS .. இந்தியாவையே திரும்பி பார்க்க வச்ச சகோதர, சகோதரிகள்.. எல்லாத்துக்கும் அப்பா போட்ட "ஒரே கண்டிஷன்"தான் காரணம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்திர பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 சகோதர, சகோதரிகள் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளாகி பணியாற்றி வருகிறார்கள். ஆனால், இதற்கு தங்களது தந்தை தான் காரணம் என்கிறார்கள் இவர்கள்.

ஒரே வீட்ல 4 IAS, IPS .. இந்தியாவையே திரும்பி பார்க்க வச்ச சகோதர, சகோதரிகள்.. எல்லாத்துக்கும் அப்பா போட்ட "ஒரே கண்டிஷன்"தான் காரணம்..!

முக்கியத்துவம்

உத்தரப் பிரதேச மாநிலத்தின் லால்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அனில் பிரகாஷ் மிஸ்ரா. இவர் உள்ளூரில் உள்ள கிராமிய வங்கியில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இவருக்கு யோகேஷ் மிஸ்ரா, ஷமா மிஸ்ரா, மாதுரி மிஸ்ரா, லோகேஷ் மிஸ்ரா என்ற நான்கு பிள்ளைகள் உள்ளனர். தன்னுடைய மகன் மற்றும் மகள்களின் கல்வியில் ஆரம்பம் முதலே மிகுந்த கவனத்துடன் இருந்து வந்திருக்கிறார் அனில் பிரகாஷ். தனது பிள்ளைகளை எப்படியாவது ஐஏஎஸ் அதிகாரிகளாக்கிவிட வேண்டும் என்பதே இவரது கனவாக இருந்து வந்திருக்கிறது.

இதனால் தமது பிள்ளைகள் பள்ளியில் படிக்கும்போதே ஐஏஎஸ் கனவுகளை அவர்களின் உள்ளத்தில் விதைத்திருக்கிறார். கல்லூரியில் இவர்கள் சேரும்போதே, ஐஏஎஸ் அதிகாரியாகும் முயற்சியில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு கல்லூரியில் இருந்தே பயிற்சி பெற்றுவந்த இவர்கள் வெகு சீக்கிரத்திலேயே அதில் வெற்றியும் பெற்றிருக்கின்றனர்.

Uttar Pradesh All 4 siblings from Lalganj family crack UPSC

பிரகாஷ்-ன் மூத்த மகனான யோகேஷ் மிஸ்ரா பொறியியல் பட்டம் பெற்று தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டே ஐஏஎஸ் தேர்வுக்கு தயாரானார். இதைத் தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற அவர் தற்போது ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரை தொடர்ந்து பிரகாஷின் மூத்த மகள் ஷமா மிஸ்ரா கல்லூரி படிப்பு படித்து முடித்த பின்னர் மூன்று முறை ஐஏஎஸ் தேர்வு எழுதி தோல்வியை தழுவினார். ஆனாலும், தன்னுடைய கனவுகளை கைவிட தயாராக இல்லாத ஷமா நான்காம் முறை தேர்வில் வெற்றி பெற்று தற்போது ஐபிஎஸ் அதிகாரியாக உள்ளார்.

மேலும் 2 ஐஏஎஸ்

தனது அண்ணன் மற்றும் அக்காவை பார்த்த மூன்றாவது மகளான மாதுரி மிஸ்ரா சொந்த ஊரில் இருந்து படிப்புக்காக அலகாபாத் சென்றுள்ளார். ஆனால் அவருடைய ஆசை மட்டும் அப்படியே இருந்திருக்கிறது. இதை தொடர்ந்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்ற அவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். கடைசியாக பிரகாஷின் இரண்டாவது மகனான லோகேஷ் மிஸ்ராவும் யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 44 ரேங்க் எடுத்து ஐஏஎஸ் அதிகாரியாக உள்ளார்.

இதுகுறித்து பெருமிதத்துடன் பேசும் பிரகாஷ்,"நான் எந்த காரணத்தை கொண்டும் பிள்ளைகளின் படிப்பில் சமரசம் செய்ததில்லை. அவர்கள் வாழ்வில் மிக உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என அடிக்கடி அவர்களிடம் கூறுவேன். யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும்படி நிபந்தனை விதித்தேன். இப்போது எங்களது குடும்பத்தில் 3 ஐஏஎஸ் மற்றும் ஒரு ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளனர். ஒரு தந்தையாக எனது கடமையை நிறைவேற்றியிருக்கிறேன்" என்றார்.

IAS, IPS, FAMILY, ஐஏஎஸ், ஐபிஎஸ், குடும்பம்

மற்ற செய்திகள்