'கொரோனவ காரணம் காட்டி...' 'அந்த' எக்ஸாம தள்ளி வைக்க சான்ஸே இல்ல...! - உச்ச நீதிமன்றத்திடம் நிர்வாகம் பதில்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனாவை காரணம் காட்டி சிவில் சர்வீசஸ் தேர்வுகளை ஒத்தி வைக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் யுபிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

'கொரோனவ காரணம் காட்டி...' 'அந்த' எக்ஸாம தள்ளி வைக்க சான்ஸே இல்ல...! - உச்ச நீதிமன்றத்திடம் நிர்வாகம் பதில்...!

கடந்த மே மாதம் 31-ஆம் தேதி நடக்க வேண்டிய சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வுகள், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வரும் அக்டோபர் மாதம் 4-ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ்  அச்சுறுத்தல் நீடிப்பதால் தேர்வை இரண்டு அல்லது மூன்று மாதம் தள்ளி வைக்க கோரி 20 பேர் சேர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு மீதான விசாரணையின் போது, தேர்வுகளை தள்ளி வைக்க வாய்ப்பில்லை என்று யுபிஎஸ்சி நிர்வாகம் சார்பில் பதில் அளிக்கப்பட்டது. அதை பிரமாணப்பத்திரமாக தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த மனு குறித்தான விசாரணையை அக்டோபர் 23-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

மற்ற செய்திகள்