"ஆர்டர் போட்ட வாட்ச் வந்துடுச்சு".. குஷியுடன் பார்சலை பிரிச்சவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. நொந்து போய்ட்டாங்க பாவம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திர பிரதேச மாநிலத்தில் பிரபல ஆன்லைன் டெலிவரி அப்ளிகேஷன் மூலமாக கைக்கடிகாரம் ஆர்டர் செய்தவருக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறது அந்த நிறுவனம்.
Also Read | "இனி பெண்களும் தைரியமா நைட்ல வெளில வருவாங்க".. கேரள MLA போட்ட ஒரு ஆர்டர்.. களைகட்டிய கடவுளின் தேசம்..!
ஆன்லைன் வர்த்தகம்
இந்தியாவில் பண்டிகை காலம் எப்போதுமே பெரும் வணிகத்தினை உள்ளடக்கியது. வீட்டுக்குத் தேவையான பொருட்களை பண்டிகை காலங்களில் வாங்குவதையே மக்கள் வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் வாடிக்கையாளர்களை ஈர்க்க, இணையவழி வர்த்தக நிறுவனங்களும் பண்டிகை தினங்களை முன்னிட்டு சிறப்பு ஆபர்களை அளிப்பதை வாடிக்கையாக செய்துவருகின்றன. ஆனால், இந்த நடைமுறையில் சில நேரங்களில் தவறுகளும் நேரத்தான் செய்கின்றன. அந்த வகையில் உத்திர பிரதேச மாநிலத்தில் மீண்டும் ஒரு வினோத சம்பவம் நடைபெற்றுள்ளது.
உத்திர பிரதேச மாநிலத்தின் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள கசெண்டா கிராமத்தை சேர்ந்தவர் நீலம் யாதவ். இவர், சமீபத்தில் பிரபல ஆன்லைன் ஷாப்பிங் இணையதளம் ஒன்றின்மூலம் தனது சகோதரர் ரவீந்திராவுக்கு வாட்ச் ஒன்றை ஆர்டர் செய்திருக்கிறார். கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி 1304 ரூபாய் மதிப்புள்ள வாட்ச் ஒன்றை, வாங்கும்போது பணம் செலுத்தும் முறையான கேஷ் ஆன் டெலிவரியில் வாங்கியிருக்கிறார். இந்த பார்சல் கடந்த 7 ஆம் தேதி டெலிவரி செய்யப்பட்டிருக்கிறது.
அதிர்ச்சி
பார்சலை ஆசையாக பிரித்துப் பார்த்த நீலம் யாதவ் அதிர்ச்சியில் அப்படியே உறைந்துபோனார். அந்த பார்சலுக்குள் மாட்டுச் சாணத்தில் செய்யப்பட்ட வறட்டிகள் இருந்ததுதான் அவருடைய அதிர்ச்சிக்கு காரணம். இதனையடுத்து இதுகுறித்து தனது சகோதரர் ரவீந்திராவிடம் அவர் தெரிவிக்க, டெலிவரி செய்த நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார் ரவீந்திரா. அப்போது, பணத்தை மீண்டும் பெற்றுத் தருவதாக அந்த ஊழியர் உறுதி அளித்ததுடன் அந்த வறட்டி பார்சலையும் வாங்கிச் சென்றிருக்கிறார். இந்த சம்பவம் உள்ளூ மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
முன்னதாக டெல்லியை சேர்ந்த யஷஸ்வி சர்மா என்பவர் தனது தந்தைக்கு பிரபல இணைய வழி வர்த்தக நிறுவனம் ஒன்றின் மூலம் லேப்டாப் ஆர்டர் செய்திருந்தார். ஆனால் அவருக்கு துணி துவைக்கும் சோப்பு கட்டிகள் அனுப்பப்பட்டன. இதனையடுத்து அவர் போட்ட பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்