இதவிட வேற என்ன மகிழ்ச்சி இருக்கு...! 'நாங்க மணப்பெண்ணுக்கு ஒரு செய்தி கொண்டு வந்திருக்கோம்...' - 'விஷயத்த' கேள்விப்பட்ட உடனே 'மணமேடையே' ஒரு நிமிஷம் அதிர்ந்திடுச்சு...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திரபிரதேச மாநிலம் ரேபரேலி அடுத்த முகமதுபூர் ஜாதித் கிராமத்தை சேர்ந்தவர் பூனம் என்ற பெண். 20 வயதுகளே நிரம்பிய பூனம், தனது கிராமத்தில் நடந்த பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கான வாக்குகள் எண்ணப்பட்டன. ஆனால் அதே சமயத்தில் நேற்று பூனம் அவர்களுக்கு, ராம்பூரில் திருமணமும் நடைபெற்று கொண்டிருந்தது.
அதன்பின், பஞ்சாயத்து தேர்தலில் பூனம் 601 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனை அறிந்த மணப்பெண் பூனம் இரட்டை மகிழ்ச்சியில் மணமேடை அதிர துள்ளி கொண்டாடியுள்ளார்.
அதன்பின், திருமண சடங்குகள் முடிந்தவுடன் நேராக தனது உறவினர் மற்றும் கணவரான மணமகனுடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு திருமண கோலத்தில் வந்தார்.
பூனத்தை பார்த்த அதிகாரிகள் அனைவரும் ஆச்சரியப்பட்டு அவரிடம் கேட்டத்தில், இப்போது தான் திருமணம் முடிந்ததாகவும், தற்போது வெற்றி பெற்ற சான்றிதழை வாங்க வந்தாதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கூறிய பூனம், 'பஞ்சாயத்து உறுப்பினர் தேர்தலில் 601 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றேன். எனது போட்டியாளரான சகுந்தலாவை 31 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளேன். இந்த வெற்றியின் மூலம் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்துள்ளது. இந்த தருணத்தை என்னால் மறக்கவே முடியாது. திருமணத்தின் சடங்குகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன' என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மற்ற செய்திகள்