சாலையில் கிடந்த மர்ம பொருள்.. குண்டுன்னு நெனச்சு தெறிச்சு ஓடிய கிராம மக்கள்.. செக் பண்ணிட்டு போலீஸ் சொன்ன விஷயம்..
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் வித்தியாசமான உருண்டை வடிவத்தில் கிடந்த பொருளால் மக்கள் பீதியடைந்திருக்கின்றனர். இதனையடுத்து போலீசார் அங்கே ஆய்வு செய்து உண்மையை கண்டறிந்துள்ளனர்.
உத்திர பிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள பில்ஹவுர் கிராமத்தில் வித்தியாசமான பொருள் ஒன்று கிடந்திருக்கிறது. இதனால் சந்தேகமடைந்த கிராம மக்கள் சிலர் அதனை ஆய்வு செய்யும்போது, பார்ப்பதற்கு குண்டு போலவே இருப்பதாக சிலர் தெரிவிக்க கிராமமே பதற்றத்தில் மூழ்கியிருக்கிறது. உருண்டை வடிவில் இருந்த பொருளை சிலர் வீடியோவாக எடுத்து வெளியிடவும் செய்திருக்கின்றனர்.
சற்று நேரத்தில் இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவ ஆரம்பித்திருக்கிறது. இதனையடுத்து, இது குறித்து கான்பூர் நகர் காவல்துறைக்கும் தகவல் கிடைத்திருக்கிறது. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஆய்வு நடத்தியதாக தெரிகிறது.
இந்நிலையில், அந்த வீடியோவில்,"கான்பூரில் உள்ள பில்ஹவுர் கிராமத்தில் முட்டை வடிவ குண்டுகள் கிடைத்திருக்கின்றன. இதனால் கிராம மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது" எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து கான்பூர் நகர் போலீஸ் கமிஷனர் அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள அந்த பதிவில்,"சந்தேகத்திற்கிடமாக எதுவும் இல்லை. அவை விலங்குகளின் மலம் தான்" எனக் குறிப்பிட்டுள்ளனர். இதனிடையே இந்த வீடியோவும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் பதிலும் தற்போது வைரலாகி வருகின்றன.
உத்திர பிரதேச மாநிலத்தில், உருண்டை வடிவத்தில் கிடந்த பொருள் குண்டாக இருக்கலாம் என மக்களிடையே பேசப்பட்டு வந்த நிலையில் அவை விலங்குகளின் மலம் என காவல்துறை தெரிவித்திருப்பது தற்போது அப்பகுதி முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.
Also Read | வரலாற்று வெற்றியை பதிவு செய்த மொரோக்கோ.. மகனுடன் மைதானத்தில் நடனமாடிய தாய்.. உலக வைரல் வீடியோ..!
மற்ற செய்திகள்