'2 வருசத்துக்கு முன்பு காணாமல் போன கார்'... 'திடீரென, சார் காரை நல்லா சர்வீஸ் பண்ணி இருக்காங்களா?, சேவைக்கு எத்தனை ஸ்டார் கொடுப்பீங்கன்னு கேட்ட ஊழியர்'... உடைந்த மொத்த ரகசியம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகாரை 2 வருடங்களுக்கு முன்பு தொலைவித்துவிட்டு அதன் உரிமையாளர் சோகத்திலிருந்த நேரத்தில், திடீரென கார் சரவீஸ் நிலையத்திலிருந்து வந்த அழைப்பால் காரின் உரிமையாளர் ஆடிப்போனார்.
உத்திர பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் ஓமேந்திர சோனி. இவர் தான் ஆசை ஆசையாக வாங்கிய காரை சிலர் திருடி சென்று விட்டார்கள். காவல்நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில், போலீசாரும் பல கட்டமாகத் தேடிப் பார்த்துள்ளார்கள். ஆனாலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் சோனியும் காரை தேடுவதை நிறுத்தி விட்டு தனது பணிகளைக் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஓமேந்திர சோனிக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது.
அதில் பேசிய கார் சர்விஸ் நிறுவன ஊழியர் ஒருவர், ‘’கார் நன்றாக சர்வீஸ் செய்யப்பட்டுள்ளதா? உங்களுக்குத் திருப்தியா? எங்கள் சேவைக்கு எவ்வளவு ஸ்டார் கொடுப்பீர்கள்'' என கேட்டுள்ளார்கள். இதை கேட்ட ஓமேந்திர சோனி அதிர்ச்சியில் உறைந்து போனார். காணாமல் போன கார் குறித்து எப்படிக் கூறுகிறார்கள் என குழப்பத்திலிருந்த அவர், அந்த ஊழியரிடம் தொடர்ந்து பேசியுள்ளார்.
அப்போது அந்த ஊழியர், 2 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோன தனது கார் பற்றிய அனைத்து விபரங்களையும் சர்வீஸ் சென்டர் ஊழியர் துல்லியமாகக் கூறியுள்ளார். இதையடுத்து காரை சர்வீஸ் செய்தது யார்? என்பது போன்ற கூடுதல் தகவல்களை ஓமேந்திர சோனி கேட்டுள்ளார். அப்போது காணாமல் போன காரை பைத்தூர் காவல் நிலையத்தில் எஸ்.ஹெச்.ஓ-ஆக (SHO - Station House Officer) பணியாற்றிவரும் கயூசலேந்திர பிரதாப் சிங் என்பவரிடம் காரை திரும்ப ஒப்படைத்ததாக சர்வீஸ் சென்டர் ஊழியர் கூறியுள்ளார்.
உடனே கதறியடித்து விட்டு சோனி காவல்நிலையத்திற்குச் சென்றுள்ளார். அங்கு விசாரித்தபோது இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட காரை கயூசலேந்திர பிரதாப் சிங் தனது சொந்த உபயோகத்திற்குப் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. கார் திருடப்பட்ட சமயத்திலேயே, அதாவது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அதன் உரிமையாளரான ஓமேந்திர சோனி இதுதொடர்பாக பாரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
காரை வாட்டர் சர்வீஸ் செய்வதற்காக ஒரு சர்வீஸ் சென்டரில் விட்டிருந்தபோது அங்கிருந்து கார் திருடப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார். ஆனால் திருடுபோன காரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால், மேற்கொண்டு விசாரணை செய்யாமல் இந்த வழக்கைக் காவல் துறையினர் முடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதன் விசாரணையை காவல்துறை உயரதிகாரிகள் கையிலெடுத்துள்ளார்கள்.
அதில் சாலையோரத்தில் கைவிடப்பட்ட நிலையிலிருந்தபோது, இந்த காரை கண்டுபிடித்தாக எஸ்ஹெச்ஓ கயூசலேந்திர பிரதாப் சிங் கூறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் காரை யாரும் சொந்தம் கொண்டாடவில்லை என்பதால், அந்தக் காரை அவர் பறிமுதல் செய்துள்ளார். அதன்பின் தனது சொந்த உபயோகத்திற்கு அவர் காரை பயன்படுத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையைத் துரிதப்படுத்தியுள்ள உயரதிகாரிகள், தில், தவறு உறுதி செய்யப்படும் பட்சத்தில் எஸ்ஹெச்ஓ கயூசலேந்திர பிரதாப் சிங் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 வருடங்களாகக் காணாமல் காரை காணாமல் தவித்த உரிமையாளர் சோனி, தற்போது நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார்.
மற்ற செய்திகள்