’அதிர்ச்சி’ வீடியோ: 'கொரோனா 'நெகட்டிவ்' ரிப்போர்ட்... வெறும் ரூ 2,500 மட்டும் தான்!" - ’கூவிக்கூவி விற்கும்’ தனியார் மருத்துமனை!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நெகட்டிவ் என ரிப்போர்ட் தருவதற்கு ரூ.2500 வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

’அதிர்ச்சி’ வீடியோ: 'கொரோனா 'நெகட்டிவ்' ரிப்போர்ட்... வெறும் ரூ 2,500 மட்டும் தான்!" - ’கூவிக்கூவி விற்கும்’ தனியார் மருத்துமனை!

கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டிருக்கும் நேரத்தில்- கொரோனா பரிசோதனைகளும், சிகிச்சைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதிக அளவிலான பரிசோதனைகள் செய்ய அரசுகள் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. பல தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுமதி கொடுக்கப்பட்டு சிகிச்சைக்கான கட்டணத்தையும் ஒரு வரைமுறைக்கு உட்படுத்தி அரசே நிர்ணயம் செய்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நெகட்டிவ் என அறிக்கை தருவதற்கு ரூ.2500 வசூலிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக வீடியோ ஒன்று ஆன்லைனில் வைரல் ஆனது. உடனே அந்த தனியார் மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனில் பரவிய அந்த வீடியோவில் ஒரு நபர் , கொரோனா நெகட்டிவ் என ரிப்போர்ட் தர மருத்துவமனை மூலம் ஏற்பாடு செய்வதாகவும் அதற்கு ஆகும் செலவு குறித்தும் பேசுகிறார்.

இது குறித்து தெரிவித்துள்ள மீரட் மாஜிஸ்திரேட், வீடியோ வைரலானதை அடுத்து தனியார் மருத்துவமனைக்கு எதிராக வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TRENDING NEWS

மற்ற செய்திகள்