Viruman Mobiile Logo top
Kaateri Mobile Logo Top

புருஷனை காணோம்னு போலீசில் புகாரளித்த மனைவி.. விசாரணைல வெளிவந்த திடுக்கிடும் தகவல்.. தாய், மற்றும் மகனை கைது செய்த போலீஸ்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்திர பிரதேச மாநிலத்தில் காணாமல்போனதாக சொல்லப்பட்ட இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

புருஷனை காணோம்னு போலீசில் புகாரளித்த மனைவி.. விசாரணைல வெளிவந்த திடுக்கிடும் தகவல்.. தாய், மற்றும் மகனை கைது செய்த போலீஸ்..!

காணவில்லை

உத்தரப் பிரதேசத்தின் மோடி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அனுஜ் குமார். 27 வயதான இவருக்கு திருமணமாகியுள்ளது. இந்நிலையில், கடந்த 18 ஆம் தேதிமுதல் தனது கணவரை காணவில்லை என அனுஜ் குமாரின் மனைவி காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். இதனிடையே காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்திருக்கின்றனர். இதனிடையே கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி அன்று நிவாரி என்ற பகுதியில் உள்ள சாலை ஓரத்தில் அனுஜின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிய காவல்துறையினர், இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, அனுஜ்-ன் தாய் மற்றும் சகோதரர் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாக காவல்துறையினரிடத்தில் தெரிவித்திருக்கிறார் அனுஜின் மனைவி. இதனையடுத்து அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

UP Man slain Mom and his lover arrested by police

கைது

அனுஜின் தாயாருக்கும் அதே பகுதியை சேர்ந்த தேவேந்திரா என்பவருக்கும் நெருங்கிய பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இது அனுஜுக்கு தெரியவரவே அவர் இதுபற்றி தனது தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், அனுஜ்-ன் தாயார், அவரது இளைய மகன் அபிஷேக் மற்றும் தேவேந்திரா ஆகியோர் அனுஜை கொலை செய்து, உடலை நிவாரி பகுதியில் வீசியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து முதல் தகவல் அறிக்கையில் அனுஜ்-ன் தாயார் மற்றும் அபிஷேக், தேவேந்திரா ஆகியோரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அனுஜ்-ன் தாயார் அவரது இளைய மகன் ஆகியோரை காவல்துறை கைது செய்திருக்கிறது. இதுகுறித்து பேசிய அந்த பகுதி எஸ்.பி இராஜ் ராஜா,"அனுஜ் கொலை வழக்கில் அவரது தாயார் மற்றும் இளைய சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள தேவேந்திராவை பிடிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது" என்றார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

MOM, UP, POLICE, உத்திரபிரதேசம், தாய், போலீஸ்

மற்ற செய்திகள்