"எப்பவும் சண்டை போடுறா, என்னால முடியல".. மனைவி தொல்லையால் கணவர் எடுத்த முடிவு.. "ஒரு மாசமா பனை மரம் தான் என் வீடு"

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கணவன் மனைவிக்கு இடையே சண்டை என்பது, பொதுவாக நடக்கும் விஷயம் தான். அப்படி எதிர்பாராத நேரத்தில் இருவருக்கும் இடையே சண்டை வரும் போது, கொஞ்ச நாள் பேசாமல் இருவரும் இருப்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம்.

"எப்பவும் சண்டை போடுறா, என்னால முடியல".. மனைவி தொல்லையால் கணவர் எடுத்த முடிவு.. "ஒரு மாசமா பனை மரம் தான் என் வீடு"

ஆனால், உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த கணவர் ஒருவர், அடிக்கடி சண்டை வருவதால் எடுத்துள்ள வினோதமான முடிவு, பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.

உத்தரப் பிரதேச மாநிலம், மவு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம் பர்வேஷ். இவருக்கும், இவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல், தகராறு முற்றியதன் காரணமாக, வித்தியாசமான முடிவு ஒன்றை ராம் பர்வேஷ் எடுத்துள்ளார். மனைவியின் தொல்லை தாங்காததால், அவரிடம் இருந்து பிரிந்து போய் 100 அடி உயரமுள்ள பனை மீரத்தின் ஏறி குடியேறி உள்ளார்.

இயற்கை உபாதை கழிக்க மட்டுமே ராம் பர்வேஷ் கீழே இறங்கி வருவதாக கூறப்படும் நிலையில், அவருக்கான உணவு வகைகள் அனைத்தும் கயிறு கட்டி கொடுக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

up man lives in palm tree after quarrel with his wife

அது மட்டுமில்லாமல், கடந்த ஒரு மாதமாக இப்படி பனை மரத்தில் ராம் பர்வேஷ் வாழ்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், இது பற்றி பேசும் ராம் பர்வேஷின் தந்தை விஷுன் ராம், "அடிக்கடி மனைவியுடன் சண்டை போடுவதால், எனது மகன் இந்த முடிவை எடுத்துள்ளார். ராமுடைய மனைவி, அடிக்கடி அவரை அடித்தும் வந்தார். அடிதடி மற்றும் தகராறு காரணமாக, தளர்ந்து போன என் மகன், பனை மரத்தில் ஏறி வாழ முடிவு செய்தார்" என கூறி உள்ளார்.

up man lives in palm tree after quarrel with his wife

ஆனால் அதே வேளையில், ஊருக்கு நடுவே உள்ள பனை மரத்தில், ராம் பர்வேஷ் வாழ்ந்து வருவது ஊர் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஊரின் நடுப்பகுதியில் பனை மரம் இருப்பதால், அங்கே உள்ள அனைத்து வீடுகள் உள்ளிட்ட இடங்கள் சரியாக தெரியும் என்பதால், அவர்கள் இதனை ஒரு தவறாக கருதி, மரத்தில் இருந்து இறங்கவும் வற்புறுத்தி உள்ளனர். மேலும், அங்குள்ள பெண்கள் அசவுகரியத்தில் இருந்தும் வருகின்றனர்.

ஆனால், விடாபிடியாக மரத்தில் இருந்து இறங்காமல், அங்கேயே இருந்து வருகிறார். மேலும், அந்த கிராம மக்கள் இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றையும் ஊர் மக்கள் கொடுத்துள்ளனர். ஆனாலும், மரத்தில் இருந்து வந்து இறங்கும் முடிவை ராம் பர்வேஷ் எடுக்காமல் தொடர்ந்து மரத்திலேயே வாழ்ந்து வருகிறார்.

இதனால், அந்த ஊர் மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் புலம்பிக் கொண்டே இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

WIFE, HUSBAND, PALM TREE

மற்ற செய்திகள்