COBRA M Logo Top

"வயல்'ல தோண்டுறப்போ கெடச்ச சாமி சிலை'ங்க இது".. பயபக்தியுடன் தொழுது காணிக்கை போட்ட மக்கள்.. "உண்மை தெரிஞ்சதும் ஊரே நடுங்கி போச்சு"

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்தர பிரதேச மாநிலத்தில் வாலிபர் ஒருவர் செய்து வந்த காரியமும், அதன் பின்னால் உள்ள மோசடி வேலையும் கடும் அதிர்ச்சியை ஊர் மக்கள் மத்தியில் உருவாக்கி உள்ளது.

"வயல்'ல தோண்டுறப்போ கெடச்ச சாமி சிலை'ங்க இது".. பயபக்தியுடன் தொழுது காணிக்கை போட்ட மக்கள்.. "உண்மை தெரிஞ்சதும் ஊரே நடுங்கி போச்சு"

Also Read | Video : விமானத்தில் ஏறிய சிறுவன்.. மறுகணமே கட்டியணைத்து கொண்ட விமான பணிப்பெண்.. சுவாரஸ்ய பின்னணி!!

உத்தர பிரதேச மாநிலம், Unnao என்னும் பகுதியில் வாலிபர் ஒருவர் தனது வயலில் தோண்டிய போது, சில தெய்வத்தின் சிலைகள் புதைந்து இருந்ததாக கூறி உள்ளார்.

வயலுக்கு அடியே புதைக்கப்பட்டு இருந்தததால், அதன் சக்தி அதிகம் இருக்கும் என கருதிய ஊர் மக்கள், அந்த சிலையை வழிபட ஆரம்பித்து ஏராளமான காணிக்கைகளை செலுத்தி வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

அப்படி ஒரு சூழ்நிலையில் தான், அந்த வாலிபர் செய்து வந்த மோசடி வேலை பற்றி அனைவருக்கும் தெரிய வந்துள்ளது. தனது வயலுக்கு அடியில் தெய்வ சிலை கிடைத்ததாக வாலிபர் கூறி இருந்த நிலையில், அவற்றை வெறும் 169 ரூபாய்க்கு ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி இருந்தார் என்பதும் தெரிய வந்துள்ளது. அதனை அந்த வாலிபரே வயலுக்கு அடியில் புதைத்து வைத்து விட்டு, அங்கிருந்து கிடைத்தது போல நாடகமும் ஆடி ஊரே ஏமாற்றியதும் தெரிய வந்துள்ளது.

up man buy statue from online cheats village people

முன்னதாக, இந்த சிலைகளை டெலிவரி செய்த ஊழியர் தான், இந்த உண்மையை உடைத்து ஊர் மக்களிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. இதன் பின்னர், இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரித்த நிலையில், அந்த வாலிபர் உட்பட அவரது குடும்பத்தினர் மூன்று பேரை கஸ்டடிக்கு எடுத்து விசாரித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

up man buy statue from online cheats village people

அது மட்டுமில்லாமல், இந்த 169 ரூபாய்க்கான தெய்வ சிலை கொண்டு சுமார் 30,000 ரூபாய் மேல் வரை அந்த வாலிபரின் குடும்பம் மோசடி செய்ததும் தெரிய வந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக இந்த வேலையில் அவர்கள் ஈடுபட்டு வந்துள்ள நிலையில், தற்போது டெலிவரி ஊழியர் மூலமே அவர்கள் சிக்கி உள்ளதும் தெரிய வந்துள்ளது.

up man buy statue from online cheats village people

உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்த இந்த மோசடி தொடர்பான செய்தி, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Also Read | இது புதுசால்ல இருக்கு.. விநாயகருக்கு ஆதார் கார்டு வடிவில் சிலை.. பிறந்த தேதிலாம் இருக்கா..?

UTTARPRADESH, BUY, STATUE, ONLINE CHEAT, VILLAGE, PEOPLE

மற்ற செய்திகள்