'என்னோட வாயில 'சிறுநீர்' கழிச்சாங்க'...'கொடூர தாக்குதலின் உச்சம்'... அதிரவைக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பத்திரிகையாளர் ஒருவர் உத்திர பிரதேச காவல்துறையினரால் அடித்து இழுத்து செல்ல பட்ட சம்பவம்,நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'என்னோட வாயில 'சிறுநீர்' கழிச்சாங்க'...'கொடூர தாக்குதலின் உச்சம்'... அதிரவைக்கும் வீடியோ!

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து அவதூறாக கருத்து கூறியதாக பலர் கைது செய்யப்பட்டது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.அதுகுறித்த சர்ச்சைகள் இன்னும் ஓயாத நிலையில், உத்திர பிரதேச காவல்துறையினர் பத்திரிகையாளரை கொடூரமாக தாக்கும் காட்சிகள், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அம் மாநிலத்தின் ஷாம்லி மாவட்டத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டது.அது குறித்த செய்தியினை சேகரிக்க பத்திரிகையாளர் அமித் ஷர்மா என்பவர் சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த மாநில ரயில்வே போலீஸார் சிலர் அவரை சுற்றிவளைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.அமித் ஷர்மா தனக்கு நடந்த சம்பவம் குறித்து ,நியூஸ்24 சேனலிடம் பேசினார்.அதில் 'செய்தி சேகரிப்பதற்காக சென்ற என்னை,அங்கிருந்த ரயில்வே போலீசார் சரமாரியாக தாக்கினார்கள்.ஆனால் அவர்கள் சீருடையில் இல்லை.அவர்கள் என்னை சரமாரியாக தாக்கியதில்,எனது கேமரா கீழே விழுந்தது. அதனை எடுக்க சென்ற போது மீண்டும் என்னை கடுமையாக தாக்கினார்கள்.அதன் பின்பு என்னை லாக்-அப்-ல் அடைத்தனர்.

எதற்காக என்னை லாக்-அப்யில் அடைத்தீர்கள் என கேட்ட போது 'எனது துணிகளை அவிழ்த்து,எனது வாயில் சிறுநீர் கழித்தார்கள் என அதிர்ச்சி அளிக்கும் வகையில் பேசியுள்ளார்.இதனிடையே சம்பவம் குறித்து அறிந்த உள்ளூர் பத்திரிகையாளர்கள் பலர் அமித் ஷர்மா இருந்த காவல் நிலையத்துக்கு விரைந்துள்ளனர். அவர்களின் தொடர் போராட்டத்தால் ஷர்மா, இன்று காலை விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் பத்திரிகையாளர் தாக்குதலில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் ஷாம்லி ராகேஷ் குமார் மற்றும் கான்ஸ்டபிள் சஞ்சய் பவார் ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளதாக உத்திரபிரதேச காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

UTTARPRADESH, POLICE, UP JOURNALIST, RAILWAY COP, URINATED, AMIT SHARMA