'அஞ்சு ரூபாய் போதும்...''ஒருத்தரோட கைரேகைய குளோன் செஞ்சிடுவேன்...' 'ஹேக் செய்த எல்லா அக்கவுண்ட்-க்கும் ஒரு ஒற்றுமை இருந்துச்சு...' - அதிர வைக்கும் வாக்குமூலம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இன்டர்நெட் மூலம் கைரேகைகளை குளோன் செய்ய கற்றுக்கொண்டு 500 பேரின் வங்கி கணக்குகளை ஹேக் செய்ததற்காக உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஆறு பேரை கைது செய்துள்ளனர் ஷாஜகான்பூர் போலீசார்.

'அஞ்சு ரூபாய் போதும்...''ஒருத்தரோட கைரேகைய குளோன் செஞ்சிடுவேன்...' 'ஹேக் செய்த எல்லா அக்கவுண்ட்-க்கும் ஒரு ஒற்றுமை இருந்துச்சு...' - அதிர வைக்கும் வாக்குமூலம்...!

இந்த நபர்கள் ஹேக் செய்த வங்கி கணக்குகள் அனைத்தும் அரசு அறிவித்துள்ளா திட்டங்கள் அனைத்தும் ஆக்டிவாக உள்ள கணக்குகள் என தற்போது தெரியவந்துள்ளது.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள 6 பேரில் ஒருவர் அந்த பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்த கவுரவ் என தற்போது தெரியவந்துள்ளது. அவர் ஒரு படித்த பட்டதாரியும் ஆவார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் “ஒருவரின் கைரேகையை அச்சு அசலாக குளோன் செய்ய 5 ரூபாய் தான் செலவாகும். இன்டர்நெட் மூலம் இதை கற்றுக் கொண்டேன்” என போலீசில் தெரிவித்துள்ளார்.

இந்த நபர்களிடமிருந்து 500 பேரின் குளோன் செய்யப்பட்ட கைரேகை, வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை மாதிரியான ஆவணங்களை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இந்த மோசடியால் பாதிக்கப்பட்ட பயனாளிகள் அனைவரும் அடிப்படை கல்வி பயிலாத அப்பாவிகள். இதை தொடர்ந்து விசாரித்ததில் சிலரது பெயர் அடிப்பட்டது. அவர்களை கைது செய்த பிறகு, கவுரவ் தான் இந்த மோசடி திட்டத்திற்கு மூளையாக இருந்து செயல்பட்டது தெரிய வந்துள்ளது.

கைது செய்துள்ளவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 420, 467, 468, 472 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்