"சபாஷ் மாப்பிள சபாஷ்"... 11 லட்ச ரூபாய் வரதட்சணையை அப்படியே திருப்பி கொடுத்த மணமகன்.. மனம் நெகிழ்ந்த நெட்டிசன்கள்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இன்றைய காலக்கட்டத்தில் திருமணத்தை சுற்றி நடக்கும் ஏராளமான விஷயங்கள் இணையத்தில் அதிகம் வைரல் ஆவதை நாம் பார்த்திருப்போம்.

"சபாஷ் மாப்பிள சபாஷ்"... 11 லட்ச ரூபாய் வரதட்சணையை அப்படியே திருப்பி கொடுத்த மணமகன்.. மனம் நெகிழ்ந்த நெட்டிசன்கள்!!

Also Read | சிதைந்து போன உடலுக்குள் உயிரோடு இருந்த பாம்பு.. பாத்ததும் ஓட்டம் பிடிச்ச நிபுணர்.. கதிகலங்க வைத்த சம்பவம்!!

திருமணத்திற்கு எடுக்கப்படும் போட்டோஷூட்கள், திருமண பத்திரிக்கைகள் தொடங்கி திருமண நாளில் தாலி கட்டி முடிப்பது வரை நடக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் புதுமையாக செய்ய பலரும் முனைப்பு காட்டுவதால் இது தொடர்பான விஷயங்கள் பலரது கவனத்தை கூட பெறும்.

அதே போல, திருமண நாளன்று மேடையில் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான செய்திகள் கூட அதிகம் இணையத்தில் வைரல் ஆவதை நாம் பார்த்திருப்போம்.

அந்த வகையில், ஒரு சம்பவம் தான் தற்போது பெரிய அளவில் வைரலாகி வருவதுடன் மட்டுமில்லாமல், ஏராளமானோரை மனம் நெகிழ வைத்துள்ளது. இது தொடர்பாக வெளியான தகவலின் படி, கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தர பிரதேச மாநிலம், லகான் என்னும் கிராமத்தில் வைத்து திருமணம் ஒன்று நடைபெற்றதாக தெரிகிறது.

up groom return 11 lakh rupees and ornaments get as dowry

இதில் மணமகனான சவுரப் சவுகான் வருவாய்த் துறை அதிகாரி என தகவல்கள் தெரிவிக்கின்றது. அதே போல, ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் மகள் தான் மணமகள் என்றும் தெரிகிறது. அப்படி இருக்கையில், தனக்கு பெண் வீட்டில் இருந்து வரதட்சணையாக கிடைத்த 11 லட்ச ரூபாய் மற்றும் தங்க நகை உள்ளிட்ட பொருட்களை திரும்பி கொடுத்துள்ளார் சவுரப் சவுகான். பதிலுக்கு திருமண சடங்கிற்காக 1 லட்ச ரூபாய் மற்றும் சவுரப் சவுகான் பெற்று கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

up groom return 11 lakh rupees and ornaments get as dowry

வரதட்சணையாக கிடைத்த பணம் மற்றும் நகைகளை மாப்பிள்ளையே திரும்பி கொடுத்துள்ள விஷயம், தற்போது அதிகம் வைரலாகி பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. அதே போல, பலரும் இதனை பின்பற்ற வேண்டும் என்றும் அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Also Read | "உங்க ஊருக்கு பொண்ணே தர மாட்டோம்".. ஒரு வருசமா No கல்யாணம்.. 'ஈ'க்களால் தூக்கம் தொலைத்த கிராமம்..

UTTARPRADESH, GROOM, RETURN, DOWRY

மற்ற செய்திகள்