‘மறுபடியும் மாஸ்க் கட்டாயம்’.. சத்தமில்லாமல் அதிகரிக்கும் நோய் தொற்று.. திரும்பவும் வந்த அதிரடி அறிவிப்பு! எங்க தெரியுமா.?!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம் என மாநில அரசு தெரிவித்துள்ளது.
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். மேலும் ஊரடங்கால் பலரது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. தற்போது நோய் தொற்று படிப்படியாக குறைந்து வருவதால், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றன்ர்.
இந்த சூழலில் இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் மெதுவாக அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2183 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. காசியாபாத், லக்னோ, மீரட் ஆகிய நகரங்களில் பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம் என அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் உத்தர பிரதேச அரசு இந்த முடிவை அறிவித்துள்ளது.
மற்ற செய்திகள்