கொலை செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட பெண் காதலனுடன் கண்டுபிடிப்பு.. 7 வருஷம் கழிச்சு வழக்கில் வந்த திடீர் திருப்பம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திர பிரதேச மாநிலத்தில் கொலை செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட பெண் ஒருவர் தனது காதலனுடன் வசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருப்பது அம்மாநிலத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Also Read | சிதைந்து போன உடலுக்குள் உயிரோடு இருந்த பாம்பு.. பாத்ததும் ஓட்டம் பிடிச்ச நிபுணர்.. கதிகலங்க வைத்த சம்பவம்!!
உத்திர பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தை சேர்ந்தவர் விஷ்ணு. இவர் 7 வருடங்களுக்கு முன்னதாக இளம்பெண் ஒருவரை கடத்தி கொலை செய்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் அடையாளம் தெரியாத இளம்பெண் ஒருவருடைய சடலமும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதனை தனது மகள் தான் என கொலை செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட இளம்பெண்ணின் தந்தை கூறியிருந்தார். இதனையடுத்து இளைஞருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், உத்திர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் கொலை செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட பெண் தனது காதல் கணவருடன் வசித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கொலை நடந்ததாக சொல்லப்பட்ட நேரத்தில் அந்த இளம்பெண் தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியதும் பின்னர் ஹத்ராஸ் பகுதியில் உள்ள கிராமத்தில் காதலனை திருமணம் செய்துகொண்டு வசித்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், விஷ்ணுவின் தாயார் சுனிதா முன்னதாக அலிகார் மூத்த காவல் கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) கலாநிதி நைதானியை சந்தித்தார். 'இறந்த' பெண் உயிருடன் இருப்பது மட்டுமல்லாமல் திருமணமாகி குழந்தைகளுடன் இருப்பதாகவும் தனக்கு தகவல் கிடைத்ததாக சுனிதா போலீஸ் அதிகாரியிடம் தெரிவித்திருக்கிறார். பின்னர், காவல்துறை அதிகாரி கலாநிதி நைதானி இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டார். அதன் பலனாக ஹத்ராஸில் வசித்துவந்த இளம்பெண் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
7 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்ததாக சொல்லப்பட்ட பெண் திருமணமாகி வசித்து வருவது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் உத்திர பிரதேச மாநிலத்தையே பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.
மற்ற செய்திகள்