ஆட்டோவை லாரியாக யூஸ் பண்றாரு.. எவ்ளோ பேரை உள்ள ஏத்திருக்காரு பாருங்க.. ஷாக்-ஆன போலீஸ்.. வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்திர பிரதேசத்தில் அதிகமான நபர்களுடன் பயணித்த ஆட்டோவை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஆட்டோவை லாரியாக யூஸ் பண்றாரு.. எவ்ளோ பேரை உள்ள ஏத்திருக்காரு பாருங்க.. ஷாக்-ஆன போலீஸ்.. வீடியோ..!

Also Read | இலங்கை அதிபர் மாளிகையில்.. பீரோ பின்னாடி இருந்த வழி.. "லிஃப்ட் வசதி வேற இருக்கா..?" - மிரண்டு போன போராட்டக்காரர்கள்

இன்றைய காலத்தில் போக்குவரத்தின் தேவை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பொது போக்குவரத்து அமைப்புகள் மக்களின் இந்த தேவையை பூர்த்தி செய்ய பல முயற்சிகளை எடுத்து வருகின்றன. இருப்பினும் ஆட்டோ, டாக்சி உள்ளிட்ட சேவைகளும் இந்தியாவில் கணிசமான அளவு மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றுக்கான விதிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. வாகனத்தில் அதிகபட்சமாக எத்தனை பேர் பயணிக்கலாம்? கட்டணம் ஆகியவை குறித்து அரசு வழிமுறைகளை வகுத்துள்ளது.

இவற்றை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பதுடன் சில நேரங்களில் வாகனங்களை காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்யவும் தவறுவதில்லை. அந்த வகையில், உத்திர பிரதேச மாநிலத்தில் 27 நபர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோவை காவல்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

அதிவேகம்

உத்திர பிரதேசத்தின் பதேப்பூர் பகுதியில் தான் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது. மத்திய உத்திர பிரதேசத்தில் உள்ள பிந்த்கி கோட்வாலி பகுதியில் வழக்கம்போல நேற்று காவல்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, ஆட்டோவில் அதிகமான நபர்களை ஒருவர் ஏற்றிவருவதை போலீசார் பார்த்துள்ளனர். மேலும், அந்த ஆட்டோ அதிவேகத்தில் பயணித்திருக்கிறது.

UP Cops Stop Autorickshaw, Find 27 Passengers Inside

நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட அதிகமான வேகத்தில் சென்றதற்காக அந்த ஆட்டோவை காவல்துறை அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர். அப்போது, அதனுள் அதிகமான நபர்கள் இருப்பதை கண்ட போலீசார் திகைப்படைந்தனர். உடனே அவர்களை கீழே இறங்கும்படி சொல்லியிருக்கிறார்கள்.

27 பேர்

காவல்துறை அதிகாரிகள் கீழே இறங்க சொன்னதும், ஆட்டோவில் அமர்ந்திருந்த 27 பேரும் கீழே இறங்கியுள்ளனர். அதிகபட்சமாக 6 பேர் மட்டுமே பயணிக்கக்கூடிய அந்த ஆட்டோவில், 27 பேரை ஏற்றியது குறித்து அந்த டிரைவரிடம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதன் அடிப்படையில் ஆட்டோவை காவல்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதனை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட இந்த வீடியோ தற்போது சமூக  வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

Also Read | "என்னை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை.. EPS-ஐ அடிப்படை உறுப்பினர் பதிவியில் இருந்து நீக்குகிறேன்".. OPS பேட்டி..!

 

UTTAR PRADESH, UP, UP COPS, AUTORICKSHAW, PASSENGERS

மற்ற செய்திகள்