VIDEO : "'கஸ்டமர்' மாதிரி சாதாரணமா தான் உள்ள வந்தாங்க.." 'சானிடைசர்' வெச்சு 'கை'ய 'க்ளீன்' பண்ண மறு செகண்ட்... நடந்த அதிர்ச்சி 'சம்பவம்'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரப்பிரதேச மாநிலம் அலிகர் (Aligarh) என்னும் பகுதியில் அமைந்துள்ள நகைக் கடை ஒன்றில், மூன்று இளைஞர்கள் முகக்கவசம் அணிந்து கொண்டு உள்ளே நுழைந்தனர்.
சாதாரணமாக வாடிக்கையாளர்களை போல அவர்கள் தோன்றிய நிலையில், அப்போது அங்கிருந்த ஊழியர் ஒருவர் இளைஞர்களின் கைகளை சுத்தம் செய்ய சானிடைசரை வழங்கியுள்ளார். அதனை வாங்கி இளைஞர்கல் சுத்தம் செய்த நிலையில், அதில் ஒருவர் மறுநொடியே தான் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து அங்கிருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களை மிரட்டினார்.
உடனடியாக, அங்கிருந்த நகைகள் மற்றும் பெட்டிக்குள் இருந்த பணத்தினை அந்த இளைஞர்கள் வேக வேகமாக தாங்கள் கொண்டு வந்த பைக்குள் போட்டு அடுத்த சில நிமிடங்களிலேயே அங்கிருந்து தப்பித்து விட்டனர். நகைகள், பணங்கள் என மொத்தமாக சுமார் 36 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வரை திருட்டு போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த மூவரும் திருட்டில் ஈடுபட்ட போது, அங்கிருந்த வாடிக்கையாளர்கள் சிலர், பயத்தில் ஒரு சிறு அசைவு கூட இல்லாமல் அமர்ந்திருந்தனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சிசிடிவி ஆதாரங்கள் கிடைத்துள்ள நிலையில், அதனைக் கொண்டு விரைவில் கொள்ளையர்களை பிடித்து விடுவோம் என போலீசார் உறுதியளித்துள்ளனர்.
In Aligarh , then men rob a jewellery shop following full ‘covid protocol’ - walk in wearing masks , get hands sanitised and then whip out a gun and rob the establishment ! @aligarhpolice have promised swift action ... pic.twitter.com/hTOREmEg2W
— Alok Pandey (@alok_pandey) September 11, 2020
மற்ற செய்திகள்