20 நிமிஷம் 'போனில்' பிஸி!!.. விபத்து நோயாளிக்கு நேர்ந்த சோகம்!.. டாக்டருடன் அனல் பறக்க சண்டையிட்ட சப் இன்ஸ்பெக்டர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரப்பிரதேசத்தில் பதான் மாவட்டத்தில் ரம்பேதி எனும் பெண்மணி மோட்டர் சைக்கிளில் தன் சிறுவயது மகன் மற்றும் உறவுக்கார பையனுடன் வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானார்.
அவரை உக்ஹாத்தி காவல் நிலைய இன்ஸ்பெக்டர், சுஷில் பன்வார் சமூக சுகாதார மையத்தில் கொண்டு வந்து சேர்த்தார் (community health centre). ஆனால் அங்கிருந்த மருத்துவர் 20 நிமிடமாக போனில் பிஸியாக இருந்ததால், ரம்பேதி இறந்துவிட்டதாகக் கூறி சுஷில், அந்த மருத்துவரிடம் கேட்க, மருத்துவருக்கும் சுஷிலுக்கும் வாக்குவாதம் ஆகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனை அடுத்து இந்த விவகாரத்தை எஸ்.எஸ்.பி சங்கல்ப் சர்மா, மாவட்ட மாஜிஸ்திரேட்டின் கவனத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார். இதை விசாரித்த மாவட்ட மாஜிஸ்திரேட் குமார் பிரஷாந்த், இதுபற்றி விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாகவும், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனிடையே ரம்பேதியின் மகன் உடல் நலம் தேறி வருவதாகவும், ரம்பேதியின் உறவுக்கார பையன் வேறொரு உயர்மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மற்ற செய்திகள்