'அன்லாக் 4.0'... 'ஊரடங்கு, இ-பாஸ் நிலை என்ன?'... 'மெட்ரோ ரயில் முதல் தியேட்டர் வரை'... 'எவற்றிற்கெல்லாம் தளர்வு?... 'மத்திய அரசின் புதிய அறிவிப்பு!'...
முகப்பு > செய்திகள் > இந்தியாஅன்லாக் 4.0 எனப்படும் 4வது கட்ட ஊரடங்கு வழிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.
அதன் விவரங்கள் பின்வருமாறு
கட்டுப்பாட்டு பகுதிகளில் மட்டும் செப்டம்பர் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
செப்டம்பர் 30 வரை கல்வி, நிறுவனங்கள் செயல்படாது. பள்ளி, கல்லுாரிகள் செயல்பட தடை தொடரும்.
9 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்கள் விரும்பினால் பள்ளி செல்லலாம்.
50 சதவீத ஆசிரியர்களுடன் ஆன்லைன் வகுப்புகள் நடத்தலாம்.
செப்டம்பர் 7 முதல் மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 21 முதல் பொழுதுபோக்கு, திறந்தவெளி திரையரங்குகள், விளையாட்டு அரங்கங்களில் 100 பேர் வரை பங்கேற்கலாம்.
திரையரங்குகள், பொழுது போக்கு பூங்காக்கள் செப்டம்பர் 30 வரை மூடப்பட்டிருக்கும்.
மாநிலங்களுக்குள் செல்லும் மக்களுக்கு இ-பாஸ் நிபந்தனை விதிக்கக்கூடாது.
உள்ளூர் அளவில் ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசுகளுக்கு தடை.
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாட்டு விமான சேவைகளுக்கு மட்டும் அனுமதி.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் செப்டம்பர் 30 வரை முழு ஊரடங்கு தொடரும்.
வெளிநாட்டு விமான சேவைகளுக்கு தடை நீடிக்கிறது.
மத்திய அரசிடம் கலந்தாலோசிக்காமல் மாநிலஅரசு ஊரடங்கை அமல்படுத் கூடாது.
மற்ற செய்திகள்