முதலில் முட்டை வீச்சு.. அடுத்து விடாமல் துரத்தி வந்த கார்.. 'நள்ளிரவில் நடந்த சோகம்’!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியில், நள்ளிரவில் பெண் பத்திரிகையாளர் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நொய்டாவில் பெண் பத்திரிகையாளர் மிதாலி சந்தோலா என்பவர், நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டு காரில் சென்றபோது, அவரை முந்திச்சென்று அருகே இன்னொரு காரில் முகமூடி அணிந்த நபர்கள் 2 பேர் சென்று கார் மீது முட்டைகளை வீசினர்.
இதனால் பயந்துவிட்ட மிதாலி காரை நிறுத்தாமல் வேகப்படுத்தியும், இந்த மர்ம நபர்கள் துரத்திச் சென்று அவரை துப்பாக்கியால் நெத்தி கைகளில் சுட்டுள்ளனர். தற்போது தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்து வரும் இந்த பெண் தற்போது அபாயகட்டத்தைத்தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளன.
பெண் பத்திரிகையாளரை மர்ம நபர்கள் முட்டை வீசி, துப்பாக்கியால் சுட்டு கொடூரமாக கொலை செய்துள்ள இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை எற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து போலீஸார் முதற்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்படி, குடும்ப பிரச்சனை காரணமாக இந்தத் துப்பாகிச் சூடு நடந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன.