‘மிஸ் யூ அப்பா’!.. மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் உடல்நலக்குறைவால் காலமானார்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

லோக் ஜனசக்தி தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான் உடல்நலக்குறைவால் காலமானார்.

‘மிஸ் யூ அப்பா’!.. மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் உடல்நலக்குறைவால் காலமானார்..!

பிகார் மாநிலத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் இன்று(08.10.2020) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் சிராக் பஸ்வான் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். அதில், ‘அப்பா நீங்கள் தற்போது இந்த உலகில் இல்லை. எப்போது எல்லாம் எனக்கு தேவையோ அப்போதெல்லாம் நீங்கள் என்னுடன் இருந்திருக்கிறீர்கள். உங்களை மிஸ் செய்கிறேன் அப்பா’ என பதிவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்